Home /News /entertainment /

லைகர் பட தோல்வியால் சமூக வலைதளத்திலிருந்து ஒதுங்கிய நடிகை சார்மி…

லைகர் பட தோல்வியால் சமூக வலைதளத்திலிருந்து ஒதுங்கிய நடிகை சார்மி…

விஜய் தேவரகொண்டாவுடன் நடிகை சார்மி

விஜய் தேவரகொண்டாவுடன் நடிகை சார்மி

இயக்குனர் பூரி ஜெகன்நாத் மீண்டும் சூப்பர் ஹிட் படத்துடன் வெற்றிப் பாதைக்கு திரும்புவார். அதுவரையில் வாழுங்கள், வாழ விடுங்கள் – நடிகை சார்மி

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    லைகர் படத்தின் தோல்வியை தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான நடிகை சார்மி சமூக வலை தளங்களில் இருந்து தற்காலிகமாக ஓய்வெடுத்துக் கொள்வதாக அறிவித்துள்ளார்.

    விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன், சிறப்பு தோற்றத்தில் மைக் டைசன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான லைகர் திரைப்படம் கடந்த மாதம் 25ஆம் தேதி வெளியானது.

    இந்த படத்தை தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனரான பூரி ஜெகன்நாத் இயக்கியிருந்தார். பாலிவுட் இயக்குனர் கரண் ஜோகர், பூரி ஜெகன்நாத், நடிகை சார்மி கவுர் உள்ளிட்டோர் இணைந்து லைகர் படத்தை தயாரித்து இருந்தனர். இந்தப்படத்தில் மார்ஷியல் ஆர்ட்ஸ் வீரராக விஜய் தேவரகொண்டா நடித்திருந்தார்.

    சினிமாவில் 25 ஆண்டுகளை நிறைவு செய்த சூர்யா… ரசிகர்கள் கொண்டாட்டம்…

    படம் வெளியாவதை முன்னிட்டு மிகப் பெருமளவில் புரமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டிருந்தனர். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. இருப்பினும் மிக மோசமான திரைக்கதை காரணமாக இந்த படம் படுதோல்வியை சந்தித்தது. அதிக பட்சமாக 125 கோடி ரூபாய் செலவில் இந்த படம் உருவாகி இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் படம் சுமார் 55 கோடி அளவுக்கு மட்டுமே வசூல் செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    லைகர் படத்தின் தோல்வியை தொடர்ந்து இயக்குநர் பூரி ஜெகன்நாத் உடன் விஜய் தேவரகொண்டா அடுத்ததாக இணைய உள்ள ஜனகனமன திரைப்படம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது ஒரு பக்கம் இருந்தாலும், லைகர் படத்தை சினிமா ரசிகர்கள் மிகக் கடுமையாக சமூக வலைதளங்களில் விமர்சித்து வந்தனர். இது ஏற்கனவே தோல்வியால் மன வருத்தத்தில் இருந்த படக்குழுவுக்கு மேலும் காயத்தை அளித்தது.

    இந்நிலையில் சமூக வலைதளங்களில் இருந்து தற்காலிகமாக ஓய்வு எடுத்துக் கொள்வதாக படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரும், நடிகையுமான சார்மி கவுர் அறிவித்துள்ளார்.



    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘ரசிகர்கள் கொஞ்சம் கூலாக இருங்கள். சமூக வலைதளங்களில் இருந்து நான் பிரேக் எடுத்துக் கொள்கிறேன். இயக்குனர் பூரி ஜெகன்நாத் மீண்டும் சூப்பர் ஹிட் படத்துடன் வெற்றிப் பாதைக்கு திரும்புவார். அதுவரையில் வாழுங்கள், வாழ விடுங்கள்’ என்று கூறியுள்ளார். சார்மியின் இந்தப்பதிவு வைரல் ஆகியுள்ளது.
    Published by:Musthak
    First published:

    அடுத்த செய்தி