Home /News /entertainment /

லைகர் பட தயாரிப்பாளர்களுக்கு ரூ. 6 கோடியை விஜய் தேவரகொண்டா திருப்பி அளிப்பதாக தகவல்…

லைகர் பட தயாரிப்பாளர்களுக்கு ரூ. 6 கோடியை விஜய் தேவரகொண்டா திருப்பி அளிப்பதாக தகவல்…

லைகர் படத்தின் போஸ்டர்

லைகர் படத்தின் போஸ்டர்

125 கோடி ரூபாய் செலவில் லைகர் உருவாகி இருப்பதாகவும், ஆனால் படம் சுமார் 55 கோடி அளவுக்கு மட்டுமே வசூல் செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    லைகர் படம் தோல்வியை சந்தித்துள்ள நிலையில் படத்தின் ஹீரோ விஜய் தேவரகொண்டா தனது சம்பளத்தில் ரூ. 6 கோடியை திருப்பி அளிப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

    விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன், சிறப்பு தோற்றத்தில் மைக் டைசன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான லைகர் திரைப்படம் கடந்த மாதம் 25ஆம் தேதி வெளியானது.

    இந்த படத்தை தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனரான பூரி ஜெகன்நாத் இயக்கியிருந்தார். பாலிவுட் இயக்குனர் கரண் ஜோகர், பூரி ஜெகன்நாத், நடிகை சார்மி கவுர் உள்ளிட்டோர் இணைந்து லைகர் படத்தை தயாரித்து இருந்தனர். இந்தப்படத்தில் மார்ஷியல் ஆர்ட்ஸ் வீரராக விஜய் தேவரகொண்டா நடித்திருந்தார்.

    நாளை மறுதினம் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புகிறார் இயக்குநர் பாரதிராஜா

    படம் வெளியாவதை முன்னிட்டு மிகப் பெருமளவில் புரமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டிருந்தனர். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. இருப்பினும் மிக மோசமான திரைக்கதை காரணமாக இந்த படம் படுதோல்வியை சந்தித்தது. அதிக பட்சமாக 125 கோடி ரூபாய் செலவில் இந்த படம் உருவாகி இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் படம் சுமார் 55 கோடி அளவுக்கு மட்டுமே வசூல் செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்நிலையில், படத்தின் ஹீரோ விஜய் தேவரகொண்டா தனது சம்பளத்தில் ரூ. 6 கோடியை தயாரிப்பாளர்கள் பூரி ஜெகன்னாத் மற்றும் சார்மியிடம் திருப்பி அளிக்கவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளன.

    லைகர் படத்திற்காக ரூ. 35 கோடியை சம்பளமாக விஜய் தேவரகொண்டா பெற்றதாக கூறப்படுகிறது.

    Naane Varuven: நாளை மறுதினம் நானே வருவேன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு

    லைகர் படத்தின் தோல்வியை தொடர்ந்து இயக்குநர் பூரி ஜெகன்நாத் உடன் விஜய் தேவரகொண்டா அடுத்ததாக இணைய உள்ள ஜனகனமன திரைப்படம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Musthak
    First published:

    Tags: Vijay deverakonda

    அடுத்த செய்தி