Home /News /entertainment /

‘யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து பணியாற்ற விருப்பம்’ – விஜய் தேவரகொண்டா

‘யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து பணியாற்ற விருப்பம்’ – விஜய் தேவரகொண்டா

விஜய் தேவரகொண்டா - யுவன்

விஜய் தேவரகொண்டா - யுவன்

தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் லைகர் படம் வெளியாகியுள்ளது. தமிழில் போதிய வரவேற்பு கிடைக்காவிட்டாலும், தெலுங்கு வட்டாரத்தில் லைகர் படம் ஓரளவு வரவேற்பை பெற்றுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக லைகர் பட நாயகன் விஜய் தேவரகொண்டா கூறியுள்ளார்.

    அர்ஜுன் ரெட்டி என்ற படத்தின் மூலம் இந்தியா முழுவதும் அறியப்பட்ட நடிகராக மாறியவர் விஜய் தேவரகொண்டா. இந்த படத்திற்கு பின்னர் வெளியான விஜய்யின் படங்கள் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

    இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக லைகர் என்ற படத்திற்கு மிகத் தீவிரமாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் லைகர் படம் இன்று வெளியாகி கலவை விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

    ‘நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் எந்த சமூக வலைதளத்திலும் இல்லை’ – நம்பி ஏமாற வேண்டாம்…

    இருப்பினும் லைகர் படத்தில் விஜய்யின் நடிப்பையும், உழைப்பையும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். பலவீனமான திரைக்கதையால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படம் ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.

    இந்நிலையில், யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக விஜய் தேவரகொண்டா விருப்பம் தெரிவித்துள்ளார்.

    தனுஷ் பட நடிகை சாரா அலி கானின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்!

    முன்னதாக லைகர் படம் வெற்றி பெறுவதற்கு யுவன் சங்கர் ராஜா வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இதற்கு பதில் அளித்த விஜய் தேவரகொண்டா விரைவில் யுவனுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக கூறியுள்ளார்.



    தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் லைகர் படம் வெளியாகியுள்ளது. தமிழில் போதிய வரவேற்பு கிடைக்காவிட்டாலும், தெலுங்கு வட்டாரத்தில் லைகர் படம் ஓரளவு வரவேற்பை பெற்றுள்ளது.

    இந்த படத்தை இயக்குனர் புரி ஜெகன்னாத், பாலிவுட் தயாரிப்பாளர் இயக்குனர் கரண் ஜோகர், நடிகை சார்மி உள்ளிட்டோர் இணைந்து தயாரித்துள்ளனர். லைகர் படத்தில் சிறப்பு தோற்றத்தில் முன்னாள் குத்துச் சண்டை உலக சாம்பியன் மைக் டைசன் இடம்பெற்றுள்ளார்.
    Published by:Musthak
    First published:

    Tags: Vijay deverakonda, Yuvan Shankar raja

    அடுத்த செய்தி