Home /News /entertainment /

Lift Review: எப்படி இருக்கிறது கவினின் ‘லிப்ட்’ திரைப்படம்?

Lift Review: எப்படி இருக்கிறது கவினின் ‘லிப்ட்’ திரைப்படம்?

லிஃப்ட்

லிஃப்ட்

பேய் படங்கள் காமெடி என்ற பெயரில் நம்மை வதைக்கிற நேரத்தில், பயமுறுத்தும்வகையில் எடுத்திருப்பதே லிப்டின் பிளஸ்.

  • News18
  • Last Updated :
அநியாயமாக இறந்து போனவர்கள் பேயாகி பழி வாங்குவதே ஆதிகாலம் தொட்டு இருந்து  வரும் பேய் படங்களுக்கான அடிப்படை நியதி. அதில் அச்சு பிசகாமல் வெளியாகியிருக்கிறது லிப்ட். பாழடைந்த பங்களாவுக்குப் பதில் நவீன ஐடி கம்பெனியை கதை நடக்கும் இடமாக காட்டியிருக்கிறார்கள். அதுவும்கூட யாவரும் நலம் அபார்ட்மெண்டை நினைவுப்படுத்துகிறது.

சென்னையிலுள்ள ஐடி கம்பெனிக்கு டீம் லீடராக பெங்களூருவிலிருந்து மாற்றலாகி வருகிறார் கவின். வந்த அன்றே வேலை முடித்து கிளம்ப இரவாகிவிடுகிறது. லிப்ட் சரியாக வேலை செய்யாமல் மக்கர் செய்ய, ஒருவழியாக பார்க்கிங் வந்து காரில் கிம்ளபுகிறார். ஆனால், அவரால் வெளியேற முடியாமல் போகிறது. மீண்டும் அலுவலகத்துக்குள் மாட்டிக் கொள்கிறார். இந்நிலையில், இன்னொரு அறையில் நாயகி அம் ரி தாவும் மாட்டிக் கொண்டிருக்கிறார். இருவரும் சேர்ந்து வெளியேற முயற்சிக்கிறார்கள். ஆனால், அவர்களை கொலை செய்ய ஒரு ஒரு அமானுஷ்ய சக்தி முயல்கிறது. அது யார், அதற்குப் பின்னால் உள்ள காரணம் என்ன, கவினும், அம்ரிதாவும்  தப்பித்தார்களா என்பதை லிப்ட் சொல்கிறது

ஐடி கம்பெனியின் டீம் லீடராக வருகிறார் கவின். கொடுத்த வேடத்தை கச்சிதமாக செய்திருக்கிறார். அங்கு ஹெச்ஆர் ஆக இருக்கும் அம்ரிதாவுக்கும் அவருக்கும் ஏற்கனவே ஒரு கசப்பான சந்திப்பு இருக்கிறது. ஐடி கம்பெனியின் நடைமுறைகளை ஒரு கதாபாத்திரத்தை வைத்து பேச விட்டிருக்கிறார்கள். அவை உண்மை என்றாலும், புதிதாக வருகிற ஒருவரிடம் ஒரு சீனியர் இப்படித்தான் மூச்சுவிடாமல் அனைத்தையும் ஒப்பித்துக் கொண்டிருப்பார்.? முன்பு எப்போதே சில நிமிடங்கள் சந்தித்த கவினை மீண்டும் அன்றுதான் அலுவலகத்தில் அம்ரிதா பார்க்கிறார். அரை நாள் ஆகவில்லை, அதற்குள், உன் மேல எனக்கு ஒரு க்ரெஷ் என்கிறார் கவினிடம். இந்த அமெச்சூர் காட்சிகள் முப்பது நிமிடங்கள் எடுத்துக் கொண்டபின்தான் பேயின் பயமுறுத்தல் ஏரியா வருகிறது

லிப்ட் தானாக இயங்குவது, சேர்கள் நகர்வது, பிரிண்டர் தன்னிச்சையாக இயங்குவது என்று வழக்கமான பேய் பயமுறுத்தல் காட்சிகள். ஒருகட்டத்தில் விஷயத்தை சொல்லுங்கப்பா என்று அலுத்துக் கொள்ளும் அளவுக்கு நீட்டியிருக்கிறார்கள். அம்ரிதா வந்த பிறகுதான் சற்று ஆறுதலாகிறது. கவின் புத்திசாலித்தனமாக எதையோ செய்யப் போகிறார் என்று எதிர்பார்த்து கடைசியில் ஏமாந்து போகிறோம். அங்கு பேயாக இருப்பவர்கள் யார், அவர்களுக்கு நேர்ந்தது என்ன என்று தெரிய வந்தபின், சம்பந்தப்பட்ட மூவரை கொலை செய்த பின் அந்த பேய்கள் எதற்காக கவினையும் அம்ரிதாவையும் கொலை வெறியுடன் துரத்துகின்றன? உண்மை வெளியே தெரிய வேண்டும் என்று அவை விரும்பியிருந்தால், நான் உங்களை பார்த்துகிட்டிருக்கேன் என்று பிரிண்ட் செய்த பேப்பரை வீணடித்ததற்கு நேரடியாக விஷயத்தை அதில் சொல்லியிருக்கலாமே? என்று பல்வேறு கேள்விகள் எழுகின்றன

Also read... நடுவிரலைக் காட்டும் சிம்பு... வெளியானது மாநாடு டிரெய்லர்!

ஒரு அலுவலகத்துக்குள், அதிலும் குறுகிய லிப்டுக்குள் காட்சிகளை எடுக்க வேண்டிய சவாலை ஒளிப்பதிவாளர் யுவா திறமையாக கையாண்டிருக்கிறார். காட்சிகளுக்கு அமைத்துள்ள நீலம் கலந்த டோனே அமானுஷ்யத்தை உணர வைக்கிறது. இசையமைப்பாளர் பிரிட்டோ மைக்கேலின் இசை படத்துக்கான டெம்போவை கூட்டுகிறது. ஒரு பேய் படத்துக்கு இரண்டே கால் மணிநேரம் என்பது அதிகம். பேய் பயமுறுத்தும் காட்சிகளை குறைத்து, திரைக்கதை ஓட்டையில் லாஜிக் பூசியிருந்தால் லிப்ட் மெருகேறியிருக்கும்.

பேய் படங்கள் காமெடி என்ற பெயரில் நம்மை வதைக்கிற நேரத்தில், பயமுறுத்தும்வகையில் எடுத்திருப்பதே லிப்டின் பிளஸ். தெரிந்த  காட்சிகளாக இருந்தாலும் பயமுறுத்தினால் போதும் என்பவர்கள் பார்க்கலாம்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Kavin

அடுத்த செய்தி