கொலை மிரட்டல்களைத் தொடர்ந்து. தற்காப்புக்காக துப்பாக்கி உரிமம் கோரி விண்ணப்பித்த பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
சல்மானுக்கு பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலிடம் இருந்து கொலை மிரட்டல் வந்ததைத் தொடர்ந்து, மும்பை போலீஸ் தலைவர் விவேக் பன்சால்கரை சந்தித்த சல்மான்கான், கொலை மிரட்டல் வந்தது குறித்து புகார் அளித்தார்.
அச்சுறுத்தல்களுக்குப் பிறகு சல்மான் கான் குண்டு துளைக்காத லேண்ட் குரூஸர் காரை பயன்படுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி.ராமா ராவ் மகள் தூக்கிட்டு தற்கொலை…
பஞ்சாபி பாடகர் சித்து மூஸ் வாலா, மே 29 அன்று பஞ்சாபின் மான்சா மாவட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். இதன்பின்னர், ஜூன் 5 அன்று சல்மானுக்கும் அவரது தந்தை சலீம் கானுக்கும் கொலை மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது.
மே 29 அன்று பஞ்சாபின் மான்சா மாவட்டத்தின் ஜவஹர்கே கிராமத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் சித்து மூஸ் வாலா சுட்டுக் கொல்லப்பட்டார். பஞ்சாப் காவல்துறையினரால் அவரது பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்ட ஒரு நாள் கழித்து இந்த சம்பவம் நடந்தது.
சல்மான் கானுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், கொல்லப்பட்ட பாடகர் சித்து மூஸ்வாலாவுக்கு நேர்ந்த கதியை, சலீம் கான் மற்றும் அவரது மகன் சல்மான் கான் இருவரும் விரைவில் சந்திக்க நேரிடும் குறிப்பிடப்பட்டு இருந்ததாக போலீஸ் வட்டாரங்கள்தெரிவித்தன.
கொலை மிரட்டல்களைத் தொடர்ந்து சல்மான் கானுக்கு ஆயுதம் வைத்துக் கொள்வதற்கான லைசென்ஸ் அளிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Salman khan