Home /News /entertainment /

திருச்சிற்றம்பலம் படத்தின் மூன்றாவது சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

திருச்சிற்றம்பலம் படத்தின் மூன்றாவது சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

திருச்சிற்றம்பலம்

திருச்சிற்றம்பலம்

இப்படத்திலிருந்து தாய் கிழவி எனும் முதல் சிங்கிளும், மேகம் கருக்காதா பெண்ணே பெண்ணே என்ற இரண்டாவது சிங்கிளும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

  • News18
  • Last Updated :
    தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தின் மூன்றாவது சிங்கிள் நாளை வெளியாகும் என தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    நடிகர் தனுஷ் தற்போது இயக்குநர் மித்ரன் ஜவஹரின் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் தனுஷுடன் இணைந்து, பிரகாஷ் ராஜ், இயக்குநர் பாரதிராஜா, ராஷி கண்ணா, நித்யா மேனன், பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் வரும் ஆகஸ்ட் 18-ஆம் தேதி வெள்ளித்திரையில் வெளியாகவுள்ளது.

    திருச்சிற்றம்பலம் படத்துக்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்திலிருந்து தாய் கிழவி எனும் முதல் சிங்கிளும், மேகம் கருக்காதா பெண்ணே பெண்ணே என்ற இரண்டாவது சிங்கிளும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த பாடலை நடிகர் தனுஷ் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து படத்தின் மற்ற பாடல்களையும் கேட்க வேண்டும் என ஆவலுடன் காத்திருந்தார்கள் ரசிகர்கள்.



    Also read... வெளியானது தனுஷின் வாத்தி படம் குறித்த புதிய அப்டேட்!



    தற்போது அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், திருச்சிற்றம்பலம் படத்தின் மூன்றாவது சிங்கிள் நாளை வெளியாகும் என தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், இந்த பாடல் தனக்கு மிகவும் ஸ்பெஷல் எனவும் இந்த பாடலை அனிருத் பாடியுள்ளார் எனவும் அதனை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Actor dhanush

    அடுத்த செய்தி