Home /News /entertainment /

'இளையராஜாவின் முதல் மாணவர்' - புகைப்படங்களை பகிர்ந்த இளம் இசையமைப்பாளர் லிடியன்

'இளையராஜாவின் முதல் மாணவர்' - புகைப்படங்களை பகிர்ந்த இளம் இசையமைப்பாளர் லிடியன்

இசையமைப்பாளர் வர்ஷன் சதீஷின் மகனான லிடியன், 14 வகையான இசை கருவிகளை இசைக்கும் திறமை கொண்டவர்.

இசையமைப்பாளர் வர்ஷன் சதீஷின் மகனான லிடியன், 14 வகையான இசை கருவிகளை இசைக்கும் திறமை கொண்டவர்.

இசையமைப்பாளர் வர்ஷன் சதீஷின் மகனான லிடியன், 14 வகையான இசை கருவிகளை இசைக்கும் திறமை கொண்டவர்.

    இசைஞானி இளையராஜாவின் முதல் மற்றும் ஒரே மாணவர் என்று கூறியுள்ள நாதஸ்வர கலைஞர் லிடியன், அது தொடர்பான படங்களை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இவை வைரலாகி வருகின்றனர்.

    மேஸ்ட்ரோ இளையராஜா கண்டிப்புக்கு பெயர் போனவர் என்பது எல்லோரும் அறிந்ததுதான். பல பிரபலங்கள் கூட, பொது மேடைகளில் இசைஞானியால் நோஸ் கட் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக அவர் மீது பல விமர்சனங்கள் இருந்தாலும், அவை அனைத்தையும் தனது இசை வலிமையால் இளையராஜா மறக்கடிக்கச் செய்து விடுவார். அந்த வகையில் அவர் என்ன செய்தாலும், அவர் மீதான அன்பும் மரியாதையும் எவருக்கும் குறையவில்லை என்பதுதான் எதார்த்தம்.

    அப்பேர்ப்பட்ட இளையராஜாவிடம், நாதஸ்வர கலைஞர் லிடியன் பவ்யமாக அமர்ந்து இசை கற்றுள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள புகைப்படங்கள் அதிக விருப்பங்களை பெற்று வருகின்றன.

    இதுதொடர்பாக பதிவிட்டுள்ள லிடியன், 'மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா அங்கிள்தான் என்னுடைய இசை ஆசிரியர் என்பதை உங்களுக்கு தெரிவிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். அவருடைய அனுபவத்தில், நான் மட்டுமே அவருடைய முதல் மற்றும் ஒரே மாணவர். ஒவ்வொரு நாளும் எனக்கு அவர் மிகுந்த அன்புடனும், அக்கறையுடனும் இசை பாடங்களை எடுக்கிறார். உங்களுடைய வாழ்த்துக்கள் எனக்கு எப்போதும் தேவை. எல்லோருக்கும் நன்றி' என்று கூறியுள்ளார்.




    இசையமைப்பாளர் வர்ஷன் சதீஷின் மகனான லிடியன், 14 வகையான இசை கருவிகளை இசைக்கும் திறமை கொண்டவர். மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் நடிப்பில், பிரமாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் பாரோஸ் படத்திற்கு லிடியன் தான் இசையமைக்கிறார். 2020-ம் ஆண்டு தனது பிறந்த நாளில் தன்னை சந்தித்த லிடியனுக்கு இளைராஜா நாதஸ்வரம் ஒன்றை பரிசாக வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Musthak
    First published:

    Tags: Ilayaraja

    அடுத்த செய்தி