ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ஹாலிவுட்டில் படம் இயக்கணுமா.. வாங்க பேசலாம்.. ராஜமெளலிக்கு ஜேம்ஸ் கேமரூன் அழைப்பு..!

ஹாலிவுட்டில் படம் இயக்கணுமா.. வாங்க பேசலாம்.. ராஜமெளலிக்கு ஜேம்ஸ் கேமரூன் அழைப்பு..!

ராஜமௌலி - ஜேம்ஸ் கேமரூன்

ராஜமௌலி - ஜேம்ஸ் கேமரூன்

ஆர்.ஆர்.ஆர் படத்தை அவர் எப்படியெல்லாம் ரசித்தார் என்பதை ராஜமௌலிக்கு அவர் உணர்ச்சியுடன் விளக்கி, ராஜமௌலியை பாராட்டினார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Mumbai, India

ஆர்ஆர்ஆர் திரைப்படத்தை ஜேம்ஸ் கேமரூன் ஒரு குழந்தையைப் போல் பார்த்து ரசித்ததாக அவரது மனைவி சூசி கேமரூன் கூறியுள்ளார். மேலும் ஹாலிவுட்டில் படம் இயக்கவேண்டும் என்றால் வாங்க பேசலாம் என்று ராஜமெளலிக்கு, அவதார் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் அழைப்பு விடுத்துள்ளார்.

டைட்டானிக், அவதார் படங்களின் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் மற்றும் ராஜமெளலி பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஆர்.ஆர்.ஆர் படத்தை அவர் எப்படியெல்லாம் ரசித்தார் என்பதை ராஜமௌலிக்கு அவர் உணர்ச்சியுடன் விளக்கி, இப்படி உணர்ச்சியாக படத்தை எடுத்ததற்காக ராஜமௌலியை அவர் பாராட்டினார். மேலும் ஆர்.ஆர்.ஆர்.திரைப்படத்தை ஜேம்ஸ் கேமரூன் ஒரு குழந்தையைப் போல் பார்த்து ரசித்ததாக அவரது மனைவி சூசி கேமரூன் கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய ஜேம்ஸ் கேமரூன், ஆர்.ஆர்.ஆர்.படத்தில் இசையை நீங்கள் வித்தியாசமாக கையாண்டிருப்பதாக ராஜமெளலிக்கு பாராட்டு தெரிவித்ததோடு, நடித்தும் காட்டினார். மேலும் அந்த படத்தில் இசையை மிகவும் அற்புதமாக கையாண்டதற்காக படத்தின் இசையமைப்பாளர் கீரவாணிக்கு ஜேம்ஸ் கேமரூன் தனது பாராட்டுகளை தெரிவித்தார்.

அதுமட்டுமில்லாமல் ஹாலிவுட்டில் படம் இயக்கவேண்டும் என்றால் நாம் பேசலாம் எனவும் ராஜமெளலியிடம் ஜேம்ஸ் கேமரூன் கூறினார். சினிமா ரசிகர்கள் பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் உலகப் புகழ்பெற்ற கோல்டன் குளோப் விருதை அள்ளியது என்பது கூறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Avatar, James Cameron, Rajamouli