Home /News /entertainment /

25 வருடங்களுக்கு முந்தை பொங்கல் திரைப்படங்கள்...!

25 வருடங்களுக்கு முந்தை பொங்கல் திரைப்படங்கள்...!

25 வருடங்களுக்கு முந்தை பொங்கல் திரைப்படங்கள்

25 வருடங்களுக்கு முந்தை பொங்கல் திரைப்படங்கள்

25 வருடங்களுக்கு முன் பொங்கலுக்கு வெளியான 9 படங்களில் ஒரு படம் பிளாக் பஸ்டர். ஐந்து படங்கள் ஹிட். 25 வருடங்களுக்கு முன் தமிழ் சினிமா வர்த்தகம் ஆரோக்கியமாகதான் இருந்துள்ளது.

  • News18
  • Last Updated :
கொரோனா பெருந்தொற்றால் வலிமை தள்ளிப்போகாமல் இருந்திருந்தால் எட்டு தமிழ்ப் படங்கள் திரையரங்குக்கு வந்திருக்காது. ஆனால், 25 வருடங்களுக்கு முன் இப்படியில்லை. பொங்கல், தீபாவளி என்றால் அரை டஜன் பெரிய படங்கள் வெளியாகும். சரியாக 25 வருடங்களுக்கு முன் 1996 பொங்கலுக்கு வெளியான படங்களைப் பற்றி பார்க்கலாம்.

1996 பொங்கலுக்கு ஒன்பது தமிழ்ப் படங்கள் திரையரங்குகளில் வெளியானது.1. அருவா வேலு

நாசர், ஊர்வசி நடித்த இந்தப் படத்தை பி.எஸ்.பாரதி கண்ணன் இயக்கியிருந்தார். ஆதித்யன் இசை. சீவலபேரி பாண்டி போல நாசர் முதுகில் அரிவாளை செருகிவிட்டு பாட்டெல்லாம் போட்டிருந்தார்கள். படம்தான் ஓடவில்லை.2. கிழக்கு முகம்

கார்த்திக், ரேஷ்மா (மலையாளப்பட ரேஷ்மா அல்ல) நடிப்பில் கிழக்கு முகம் வெளியானது. வெட்டியான் வேலை செய்யும் ஹீரோ, அவனைச் சீண்டும் ஊர் பிரசிடென்ட் மகள், கோவில் நகைத் திருட்டு என வழக்கமான தமிழ் சினிமா கிராமத்து பொங்கல். இதற்கும் ஆதித்யன்தான் இசை. படம் ப்ளாப்.3. பரம்பரை

நாட்டாமை, முத்து என்று வருடா வருடம் மெகா ஹிட் கொடுத்துக் கொண்டிருந்த கே.எஸ்.ரவிக்குமார் பிரபு, ரோஜாவை வைத்து எடுத்த படம். அப்போதெல்லாம் பிரபுக்கு நல்ல மார்க்கெட். மீசை முறுக்கி, மடித்துகட்டிய வேட்டியுடன் நடித்தாலே பி அண்ட் சியில் திரையரங்கு நிறையும். பரம்பரையும் கல்லா கட்டியது.4. கோயம்புத்தூர் மாப்பிள்ளை

25 வருடங்களுக்கு முன்பு விஜய் வளர்ந்துவரும் நடிகர். அவரைவிட சங்கவி, யுவராணி என அவரது நாயகிகள்தான் அதிகம் கவனிக்கப்பட்டனர். கோயம்புத்தூர் மாப்பிள்ளையிலும் சங்கவிதான் நாயகி. அன்று விஜய்க்கு வயது 22. படத்தில் அவரது ப்ரெண்டாக நடித்த கவுண்டமணிக்கு வயது 56. வித்யாசாகர் இசையில் பாடல்கள் அனைத்தும் ஹிட். அந்த காலகட்டத்தில் விஜய்க்கு அமைந்த வெற்றிப் படம் இது.5. வான்மதி

அகத்தியன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் 1996 பொங்கலுக்கு; வான்மதி வெளியானது. வாலியும், தேவாவும் இணைந்து சிறப்பான பாடல்களை தந்தனர். முக்கியமாக வைகறையில் வந்ததென்ன வான்மதி பாடல் அன்றை லவ்வர்ஸ் ஸ்பெஷல். படமும் ஓடி அஜித், அகத்தியன் காதல் கோட்டையில் இணைய வழி வகுத்தது.6. தாயகம்

விஜயகாந்த் காஷ்மீர் தீவிரவாதிகளை தன்னந்தனியே அழிக்கும் படங்களில் ஒன்று இந்த தாயகம். தீவிரவாதிகள் அனைவரும் முஸ்லீம்கள். அதனை பேலன்ஸ் செய்ய நாயகனுக்கு உதவி செய்யும், நபரும் அவரது மகளான நாயகியும் முஸ்லீம்களாக சித்தரிக்கப்பட்டிருந்தனர். தாயகத்தின் சிறப்பம்சம் படத்துக்கு ரஹ்மான் இசையமைத்தது.7. திரும்பிப்பார்

இராம.நாராயணன் காலையில் ஒன்று மதியம் ஒன்று மாலையில் இன்று இரவு ஒன்று என தினம் நாலு படங்கள் செய்து கொண்டிருந்த நேரம். திரும்பிப்பார் அவரது இயக்கத்தில் சரவணன், யுவராணி நடிப்பில் வெளிவந்தது. பி அண்ட் சியில் ஓரளவு ஓடவும் செய்தது. இதில் சில்க் ஸ்மிதா வினு சக்ரவர்த்தியின் மனைவியாக நடித்திருந்தார். இதுதான் அவர் நடித்த கடைசித் திரைப்படம். இதே வருடம் செப்டம்பரில் அவர் தற்கொலை செய்து கொண்டார்.8. லவ் பேர்ட்ஸ்

பி.வாசு இயக்கத்தில் பிரபுதேவா, நக்மா நடித்த படம். அப்போது காதலன், பாட்ஷா வெளியாகி பிரதேவாவும், நக்மாவும் பீக்கில் இருந்த நேரம். ரஹ்மான் இசையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படம் லவ் பேர்ட்ஸ். நடனத்தில் பிரபுதேவா பாதி கிணறுதாண்ட ரஹ்மானின் இசையும் பாடல்களும் அதனை ஈடு செய்தன. இந்தப் படத்தின் மலர்களே மலர்களே இப்போதும் பலரது பேவரைட் பாடல்.9. உள்ளத்தை அள்ளித்தா

சுந்தர் சி. இயக்கத்தில் வெளியான உள்ளத்தை அள்ளித்தா எவர்கிரீன் ஹிட்டானது. கார்த்திக், கவுண்டமணி, ரம்பா, மணிவண்ணன் என அனைவரும் அசத்தியிருந்தனர். 1968 இல் வெளியான பொம்மலாட்டம் படத்தையும், சிவாஜியின் 1958 படம் சபாஷ் மீனாவையும் கலந்துகட்டி உள்ளத்தை அள்ளித்தாவை சுந்தர் சி. எடுத்திருந்தார். இந்த இரண்டு படங்கள் மட்டுமின்றி வேறு பல படங்களின் காட்சிகளையும் சுட்டிருந்தார். முக்கியமாக 1989 இல் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடித்த வந்தனம் படத்தில் மோகன்லால் நாயகியை பிளாக்மெயில் செய்து ஐ லவ் யூ சொல்ல வைக்கும் காட்சியை அப்படியே உள்ளத்தை அள்ளித்தாவில் சுட்டு வைத்திருப்பார். இன்றுவரை சுந்தர் சி. படங்களில் இதுதான் அல்டிமேட் ஹிட் படம்.

Also read... ஷங்கரின் மகளை பாராட்டிய ரோபோ சங்கரின் மகள்..!

25 வருடங்களுக்கு முன் பொங்கலுக்கு வெளியான 9 படங்களில் ஒரு படம் பிளாக் பஸ்டர். ஐந்து படங்கள் ஹிட். 25 வருடங்களுக்கு முன் தமிழ் சினிமா வர்த்தகம் ஆரோக்கியமாகதான் இருந்துள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Entertainment

அடுத்த செய்தி