அறிமுக இயக்குநர் கணேஷ் கே.பாபு இயக்கத்தில் கவின், அபர்ணா தாஸ் இணைந்து நடித்துள்ள டாடா திரைப்படம் திரையரங்குகளில் கடந்த 10 ஆம் தேதி வெளியாகி பாஸிட்டிவ் விமர்சனங்களைப் பெற்றுவருகிறது. பிரபலங்கள் பலரும் இந்தப் படத்தைப் பாராட்டி சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துவருகின்றனர்.
ஒலிம்பியா மூவிஸ் சார்பில் அம்பேத் குமார் தயாரித்துள்ள இந்தப் படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்தப் படத்தில் பாக்யராஜ், ஐஸ்வர்யா பாஸ்கரன், விடிவி கணேஷ், பிரதீப் ஆண்டனி, ஹரிஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். எழில் அரசு ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு ஜென் மார்டின் இசையமைத்துள்ளார்.
Counting my blessings 🙏🏼♥️
Thanks a lot na :)
Means soo muchh ♥️
Love you 🤗@Dir_Lokesh 💥 https://t.co/DjbMRp5Hhv
— Kavin (@Kavin_m_0431) February 13, 2023
இந்த நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் டாடா படம் தொடர்பாக ட்வீட் செய்துள்ளார். அதில், டாடா படம் தொடர்பாக நேர்மறையான விஷயங்களை கேள்விப்படுகிறேன். வாழ்த்துகள்டா கவின் . டாடா படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார். அவருக்கு பதிலளித்துள்ள கவின், ஆசிர்வாதங்களை எண்ணிக்கொண்டிருக்கிறேன். மிக்க நன்றினா. லவ் யூ என்று குறிப்பிட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kavin, Lokesh Kanagaraj