முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / அப்போ புரமோல பார்த்தது விஜய் லுக் இல்லையா? - காஷ்மீரிலிருந்து லோகேஷ் பகிர்ந்த 'லியோ' டீம் போட்டோ

அப்போ புரமோல பார்த்தது விஜய் லுக் இல்லையா? - காஷ்மீரிலிருந்து லோகேஷ் பகிர்ந்த 'லியோ' டீம் போட்டோ

நடிகர் விஜய்

நடிகர் விஜய்

காஷ்மீரில் படமாக்கப்படவிருப்பதால் இந்தியா அல்லது சர்வதேச அளவிலான போதைப் பொருள் கடத்தலை பற்றிய படமாக இருக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

விஜய் - லோகேஷின் லியோ படத்தின் ப்ரமோ வெளியாகி ஒரு வாரத்துக்கு மேலாகியும் சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கில் இருந்துவருகிறது. பொதுவாக தமிழ் படங்கள் முடிவடையும் தருவாயில்தான் படத்தின் ரிலீஸ் தேதி முடிவு செய்யப்படும். ஆனால் லியோ படம் வருகிற அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகும் என அதிரடியாக அறிவிக்கப்பட்டது.

நடிகர் விஜய், இயக்குநர் லோகேஷ், கௌதம் மேனன் உள்ளிட்ட படக்குழுவினர்

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக 14 ஆண்டுகளுக்கு பிறகு திரிஷா நடிக்கிறார். இதில் ஹைலைட் என்னவென்றால் விஜய்க்கு மட்டுமல்ல திரிஷாவுக்கும் இது 67 படம். சமீபத்தில் காஷ்மீரில் இருக்கும் படத்தை திரிஷா பகிர்ந்திருந்தார். இந்தப் படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த் என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துவருகின்றனர்.

கைதி, விக்ரம் படங்களில் தமிழ்நாடு அளவிலான போதைப் பொருள் கடத்தலை பதிவு செய்திருந்தார். இதில் காஷ்மீரில் படமாக்கப்படவிருப்பதால் இந்தியா அல்லது சர்வதேச அளவிலான போதைப் பொருள் கடத்தலை பற்றிய படமாக இருக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது இயக்குநர் லோகேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் காஷ்மீரில் நடிகர், விஜய், இயக்குநர் கௌதம் மேனன், மலையாள இளம் நடிகர் மேத்யூ தாமஸ், சண்டைப் பயிற்சி இயக்குநர்கள் அன்பறிவு உட்பட படக்குழுவினருடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்துள்ளார்.அதில் சமீபத்தில் புரமோவிலிருந்து மாறுபட்டு வித்தியாசமான ஹேர்ஸ்டைலுடன் நடிகர் விஜய் இருக்கிறார். இது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: Actor Thalapathy Vijay