முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / தாயார் மரணம்... காஷ்மீரில் இருந்து சென்னைக்கு விரைந்த லியோ பிரபலம்

தாயார் மரணம்... காஷ்மீரில் இருந்து சென்னைக்கு விரைந்த லியோ பிரபலம்

விஜய்

விஜய்

இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில் அறிவழகன் இயக்கிய ‘ஈரம்’ படத்தின் மூலம் அறிமுகமான மனோஜ், தெலுங்கு திரைப்பட இயக்குநர் யு.வி.பாபுவின் மகன்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

லியோ படத்தின் படப்பிடிப்பில் இருந்து திடீரென சென்னை திரும்பியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், த்ரிஷா நடிக்கும் 'லியோ' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவின் தாயார் பிப்ரவரி 18-ஆம் தேதி திடீரென காலமானார்.

இதனால் மனோஜ் தனது அம்மாவின் இறுதிச் சடங்குகளில் பங்கேற்பதற்காக ‘லியோ’ படப்பிடிப்பில் இருந்து சென்னை திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது. சில நாட்களுக்குப் பிறகு அவர் காஷ்மீர் திரும்புவார் என்றும், அவருக்கு பதில் மற்றொரு கேமரா மேன் ஒரு சில பகுதிகளின் படப்பிடிப்பை நடத்துவார் என்றும் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில் அறிவழகன் இயக்கிய ‘ஈரம்’ படத்தின் மூலம் அறிமுகமான மனோஜ், தெலுங்கு திரைப்பட இயக்குநர் யு.வி.பாபுவின் மகன். ’விண்ணைத்தாண்டி வருவாயா', 'நண்பன்', 'ராதே ஷ்யாம்', 'பீஸ்ட்' மற்றும் கெளதம் மேனன் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் நீண்ட கால தயாரிப்பில் இருக்கும் 'துருவ நட்சத்திரம்' உட்பட பல மறக்கமுடியாத படங்களில் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவாளராக பணியாற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Thalapathy Vijay