Home /News /entertainment /

சிகிச்சைக்கு பணம் இன்றி தவிக்கும் பழம்பெரும் நடிகை - என்ன நடந்தது?

சிகிச்சைக்கு பணம் இன்றி தவிக்கும் பழம்பெரும் நடிகை - என்ன நடந்தது?

நடிகை ஜெயக்குமாரி

நடிகை ஜெயக்குமாரி

தான் சிகிச்சைக்கு பணமின்றி தவித்து வருவதாகவும், உயர்சிகிச்சைக்கு செல்ல முடியாமல் தவித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    பழம்பெரும் நடிகை ஜெய்க்குமாரி, சிறுநீரக பாதிப்பால் அவதியுற்று, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சைக்கு பணம் இன்றி தவிப்பதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார். 

    தமிழில், ‘நாடோடி’, ‘அனாதை ஆனந்தன்’, ‘மன்னவன்’, ‘ரிக்‌ஷாக்காரன்’, ‘காசேதான் கடவுளடா’ உட்பட பல்வேறு படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்தவர் ஜெய்க்குமாரி. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உட்பட பல்வேறு மொழிகளில் சுமார் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவருக்குத் திருமணமாகி ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர்.

    சென்னை வேளச்சேரியில் வசித்து வந்த அவருக்கு தற்போது சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். ஆனால் சிகிச்சைக்கு பணம் இல்லாததால், தன்னம் தனியாக தவித்து வருகின்றார். இவர்களது மகன், மகள்களும் கண்டுகொள்ளாததால் மருத்துவமனையில் சிரமப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

    ALSO READ | இன்றிரவு சென்னை திரும்புகிறார் நடிகர் அஜித்… அடுத்ததாக தாய்லாந்து பயணம்

    இதுதொடர்பாக பேசிய அவர், தான் சிகிச்சைக்கு பணமின்றி தவித்து வருவதாகவும், உயர்சிகிச்சைக்கு செல்ல முடியாமல் தவித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தனக்கு கருணாநிதியை தெரியும் என்றும், தற்போது அவரது மகன் ஸ்டாலின்தான் முதலமைச்சராக உள்ளார். அவர் சிகிச்சை அளிக்க உதவி செய்தால் நன்றாக இருக்கும் என கேட்டுகொண்டார்.
    Published by:Anupriyam K
    First published:

    Tags: Actress, Hospital

    அடுத்த செய்தி