படம் சொல்லும் கதை - 56 வருடங்களை நிறைவு செய்த திருவிளையாடல்!

திருவிளையாடல்

திரைப்படத்தில் கொங்கு வழக்கை முதலில் அறிமுகப்படுத்தியவர் நாகராஜன்தான். நல்ல தங்காள், மக்களை பெற்ற மகராசி போன்ற பிரபலமான படங்கள் இவரது எழுத்தில் உருவானவை.

  • News18
  • Last Updated :
  • Share this:
தமிழ் சினிமாவின் மறக்க முடியாத திரைப்படங்களுள் ஒன்று திருவிளையாடல். ஏபி நாகராஜன் இயக்கத்தில் சிவாஜி கணேசன் நடித்து தூள் கிளப்பிய படம். அவருக்கு இணையாக நாகேஷும் கலக்கியிருப்பார். படத்தின் வசனங்கள் இப்போதும் பிரகாசம் குறையாமல் இருக்கின்றன. 

திருவிளையாடலை உருவாக்கிய ஏபி நாகராஜனும், தனது நடிப்பால் அதனை காவியமாக்கிய சிவாஜி கணேசனுக்கும் உள்ள ஒற்றுமை இருவரும் நாடக பின்புலத்திலிருந்து வந்தவர்கள். ஏபி நாகராஜனின் வாழ்க்கை ஒரு திரைப்படத்தின் ஏற்ற இறக்கங்களை கொண்டது. அவரது இயற்பெயர் குப்புசாமி. சேலம் மாவட்டம் சங்ககிரியிலுள்ள அக்கம்மாபேட்டை சொந்த ஊர். சின்ன வயதிலேயே அப்பா, அம்மா அடுத்தடுத்து இறந்துவிட, அவரது பாட்டி நாடகக் கம்பெனியில் சேர்த்து விடுகிறார்.நாடக கம்பெனியில் வேலை பார்த்தால் இரண்டுவேளை உணவு நிச்சயம். அந்தளவு வறுமை. பல நாடகக் கம்பெனிகள் மாறுகிறார். அதில் ஒன்று அவ்வை டி.கே.சண்முகத்தின் நாடகக் கம்பெனி. அங்கு நிறைய குப்புசாமிகள் இருக்க, இவரது பெயரை நாகராஜன் என மாற்றுகின்றனர். நாகராஜன் பார்க்க அழகாக இருப்பதால் அவரை பல நாடகங்களில் ஸ்த்ரீபார்ட்டில் நடிக்க வைத்திருக்கிறார்கள். சக்தி நாடக சபாவுக்கு மாறியபோது அங்கு பழக்கமானவர்தான் கணேசன். பின்னாளைய சிவாஜி கணேசன்Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நாடக கம்பெனியின் சூட்சுமம் அறிந்த பிறகு நாகராஜன் சொந்தமாக நாடகக் கம்பெனி தொடங்கி, அவரே கதை எழுதி, நடித்து, நாடகங்கள் போட ஆரம்பித்தார். அதில் ஒன்று நால்வர். அந்த நாடகம் திரைப்படமானபோது நாயகன் வேடத்தில் அவரே நடித்தார். பிறகு மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த படங்களில் தொடர்ச்சியாக நடிக்க ஆரம்பித்தார். நடிப்பைவிட அவருக்கு எழுத்தின் மீது தீராக்காதல் இருந்தது. பல படங்களுக்கு கதைகள் எழுதினார்.திரைப்படத்தில் கொங்கு வழக்கை முதலில் அறிமுகப்படுத்தியவர் நாகராஜன்தான். நல்ல தங்காள், மக்களை பெற்ற மகராசி போன்ற பிரபலமான படங்கள் இவரது எழுத்தில் உருவானவை. 1958 இல் வெளியான சம்பூர்ண ராமாயணம் ராஜாஜியிடம் பாராட்டைப் பெற்றுத் தந்தது. புராண கதைகளுக்கு தமிழ்நாட்டில் நல்ல மவுசு இருப்பதை அப்போதுதான் அவர் அனுபவப்பூர்வமாக புரிந்து கொண்டார்.அந்த புரிதலே அவர் இயக்குனரான போது திருவிளையாடல், நவராத்திரி, சரஸ்வதி சபதம், கந்தன் கருணை, திருவருட்செல்வர்  என்று தொடர்ந்து புராணப்படங்களை எடுக்க வைத்தன. இத்தனைக்கும் அவரது முதலிரு படங்கள் (வடிவுக்கு வளைக்காப்பு, குலமகள் ராதை) இதிலிருந்து மாறுபட்டவை. 1968 இல் வெளிவந்த தில்லானா மோகனாம்பாள் தமிழ் சினிமா சரித்திரத்தில் இன்றும் மைல் கல் திரைப்படம்

Also read... ராம் சரண் படத்தின் நாயகி யார்? - அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஷங்கர்!

வறுமையால் நாடகக் கம்பெனியில் சேர்க்கப்பட்டு படிப்படியாக தொழில் சூட்சுமங்கள் கற்று, நடிகராகி, நாடகக் கம்பெனி தொடங்கி, படத்துக்கு கதையெழுதி, படங்களில் நடித்து, இயக்குனராக பல வெற்றிப் படங்களை தந்து தமிழ் சினிமாவின் அழியாத இடத்தில் இடம்பிடித்தவர் ஏபி நாகராஜன். திருவிளையாடல் தருமிக்கும், கவியாக வரும் சிவாஜி கணசேனுக்கும் இடையில் நடக்கும் கேள்விப் பதில் சொற்போர் என்று கேட்பினும் சலிக்காதவை. திருவிளையாடல் போல் ஒரு படம் இனி சாத்தியமில்லை என்பதே அதன் முக்கியத்துவம்.
Published by:Vinothini Aandisamy
First published: