• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பிரபல மலையாள நடிகர் நெடுமுடி வேணு காலமானார்

பிரபல மலையாள நடிகர் நெடுமுடி வேணு காலமானார்

நடிகர் நெடுமுடி வேணு

நடிகர் நெடுமுடி வேணு

பிரபல மலையாள திரைப்பட நடிகர் நெடுமுடி வேணு உடல்நலக்குறைவால் காலமானார்.

  • Share this:
    பிரபல மலையாள திரைப்பட நடிகர் நெடுமுடி வேணு உடல்நலக்குறைவால் காலமானார்.

    பிரபல மலையாள திரைப்பட நடிகர் நெடுமுடி வேணு  உடல்நலக்குறைவு காரணமாக திருவணந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அண்மையில் கொரோனா பெருந்தொற்றில் இருந்து மீண்டு வந்த இவர் கடும் வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று  சிகிச்சை பலனின்றி காலமானார்.

    இவர் மலையாளம், தமிழ் மொழிகளில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் கமல் நடிப்பில் வெளியான இந்தியன் படத்தில் சிபிஐ ஆபிசராக கலக்கியிருப்பார். இவர் தமிழில் இந்தியன், அந்நியன், சர்வம் தாளமயம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

    கேரள மாநிலம் ஆலப்புழாவின் உள்ள நெடுமுடியில் பிறந்த இவரது இயற்பெயர் கேசவன் வேணுகோபால்.  1978-ம் ஆண்டில் இருந்து மலையாள சினிமாவில் நடித்து வருகிறார். சினிமாவுக்கு முன்பு பல்வேறு நாடகங்களில் நடித்து வந்துள்ளார். 1980-களில் இருந்து மலையாள சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். மூன்று முறை தேசிய விருது வென்றுள்ளார். கேரள மாநில விருது, பிலிப் பேர் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வென்றுள்ளார். இவரது மறைவுக்கு மலையாளம், தமிழ் திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: