Home /News /entertainment /

ஆக்சன் காட்சிகள் நிறைந்த தி லெஜெண்ட் கன்னட ட்ரெய்லர் வெளியீடு…

ஆக்சன் காட்சிகள் நிறைந்த தி லெஜெண்ட் கன்னட ட்ரெய்லர் வெளியீடு…

தி லெஜெண்ட் சரவணன்

தி லெஜெண்ட் சரவணன்

அதிரடி சண்டைக் காட்சிகள், காதல், சென்டிமென்ட் உள்ளிட்டவை அடங்கிய கமர்ஷியல் படமாக தி லெஜெண்ட் உருவாக்கப்பட்டுள்ளது.

    சரவணன் நடிப்பில் உருவாகியுள்ள தி லெஜெண்ட் படத்தின் கன்னட மொழி ட்ரெய்லர் தற்போது வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

    தொழிலதிபர் சரவணா ஸ்டோர் சரவணன் தி லெஜன்ட் என்ற திரைப்படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார். ஜேடி - ஜெர்ரி இயக்கியுள்ளனர். அந்த திரைப்படத்திற்கு ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார்.

    மிக பிரம்மாண்டமான பொருட் செலவில் எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகின. இந்த படத்தின்  வெளிநாடுகளில் வெளியீடும் உரிமையை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏ.பி இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

    தேசிய விருதுகள் போற்றிய ‘சூரரைப் போற்று’ – படத்தின் நினைவில் நீங்காத தருணங்கள்…

    இந்த திரைப்படத்தில் சரவணனுடன் இந்தி முன்னணி நடிககை  ஊர்வசி ரவுத்தலா  நாயகியாக நடித்துள்ளார்.  அதேபோல் மறைந்த நடிகர் விவேக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.



    இந்நிலையில் தி லெஜெண்ட் படத்தின் கன்னட ட்ரெய்லர் இன்று வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.



    ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. நீண்ட இடைவேளைக்கு பின்னர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    லெஜெண்ட் படத்தில் சைன்டிஸ்ட் கேரக்டரில் சரவணன் நடித்திருக்கிறார். அதிரடி சண்டைக் காட்சிகள், காதல், சென்டிமென்ட் உள்ளிட்டவை அடங்கிய கமர்ஷியல் படமாக தி லெஜெண்ட் உருவாக்கப்பட்டுள்ளது.

    வரும் வெள்ளியன்று இந்த திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், படத்திற்கான புரொமோஷன் நிகழ்ச்சியில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
    Published by:Musthak
    First published:

    Tags: Kollywood

    அடுத்த செய்தி