முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / இயக்குனர் லீனா மணிமேகலை நவம்பர் 1-ம் தேதி ஆஜராகவேண்டும் - டெல்லி நீதிமன்றம் சம்மன்

இயக்குனர் லீனா மணிமேகலை நவம்பர் 1-ம் தேதி ஆஜராகவேண்டும் - டெல்லி நீதிமன்றம் சம்மன்

காளி - லீனா மணிமேகலை

காளி - லீனா மணிமேகலை

தான் இயக்கிய காளி நிகழ்த்து ஆவணப்படத்தின் போஸ்டரை தன் டிவிட்டர் பக்கத்தில் லீனா மணிமேகலை சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

காளி போஸ்டர் தொடர்பாக ஆவணப் பட இயக்குனர் லீனா மணிமேகலை நவம்பர் 1-ம் தேதி ஆஜராகவேண்டும் என டெல்லி நீதிமன்றம் சம்மன் பிறப்பித்துள்ளது.

தான் இயக்கிய காளி நிகழ்த்து ஆவணப்படத்தின் போஸ்டரை தன் டிவிட்டர் பக்கத்தில் லீனா மணிமேகலை சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டார்.

காளி வேடம் அணிந்த ஒரு பெண் சிகரெட் புகைப்பது போன்றும், ஓரினச் சேர்க்கையாளர்களின் கொடியை வைத்திருப்பது போன்றும் சித்தரிக்கப்பட்டு இருந்தது.

இதனைதொடர்ந்து இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தியதாக கூறி பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு வெளியான நிலையில் உத்தரப்பிரதேசம் மற்றும் டெல்லியில் வழக்குகள் பதிவாகின.

Also read... திருச்சியில் அடுத்த மாதம் இசை நிகழ்ச்சி - இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா அறிவிப்பு!

இந்நிலையில் நவம்பர் ஒன்றாம் தேதி லீனா மணிமேகலை ஆஜராக வேண்டும் என டெல்லியில் தீஸ் ஹசாரி நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: Delhi High Court, Leena Manimekalai