ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

இணையவாசிகளிடம் சிக்கிய ஆதிபுருஷ் கிராபிக்ஸ்! ஓடி வந்து விளக்கமளித்த VFX நிறுவனம்!

இணையவாசிகளிடம் சிக்கிய ஆதிபுருஷ் கிராபிக்ஸ்! ஓடி வந்து விளக்கமளித்த VFX நிறுவனம்!

ஆதிபுருஷ் படத்தில் பிரபாஸ்

ஆதிபுருஷ் படத்தில் பிரபாஸ்

5 மொழிகளில் வெளியாக உள்ள ஆதிபுருஷ் படத்தின் டீசர் யூடியூபில் வெளியானது. இதை பார்த்த பிறகு ரசிகர்கள் ‘ஏமாற்றமளிக்கும் ஆதிபுருஷ்’ (#DisappointingAdipurush) என ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

 • News18
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ஆதிபுருஷ் படத்தின் டீசர் வெளியாகி பல விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் VFX நிறுவனம் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது.

  பாகுபலி படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பின்னர் பிரபாஸின் நடிப்பில் வெளிவந்த சாஹோ, ராதே ஷ்யாம் படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் பிரபாஸ் மற்றும் அவரது ரசிகர்கள் அடுத்து வெளிவரவுள்ள ஆதிபுருஷ் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பை வைத்துள்ளனர்.

  ராமாயணத்தை அடிப்படையாக கொண்டு இந்த படத்தை இயக்குனர் ஓம் ராவத் இயக்கியுள்ளார். படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக க்ரித்தி சனோன் நடித்திருக்கிறார். வில்லனாக ராவணன் கேரக்டரில் சைஃப் அலி கான் இடம்பெற்றுள்ளார்.

  Also read... விறுவிறுப்பாக நடைபெறும் நயந்தாராவின் கோல்ட் பட பணிகள் - ரிலீஸ் எப்போது?

  ஆதிபுருஷ் படம் அடுத்த ஆண்டு ஜனவரியில் விஜய்யின் வாரிசு படத்துடன் நேரடியாக மோதவுள்ளது. இந்நிலையில் படத்தின் டீசர் வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்களிடையே வரவேற்பையும், விமர்சனங்களையும் பெற்று வருகிறது.

  5 மொழிகளில் வெளியாக உள்ள ஆதிபுருஷ் படத்தின் டீசர் யூடியூபில் வெளியானது. இதை பார்த்த பிறகு ரசிகர்கள் ‘ஏமாற்றமளிக்கும் ஆதிபுருஷ்’ (#DisappointingAdipurush) என ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

  அதில் இராவணனின் கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்ட விதத்தையும், அந்த படம் குழந்தைகளுக்கான படத்தை போல இருப்பதாகவும் நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள். இராவணனை பார்க்க இஸ்லாமிய மன்னர் போல் இருப்பதாகவும் அவர்கள் கேலி செய்து வருகின்றனர்.

  இந்நிலையில், CG/ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ்: NY VFXWala  அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் முன்னணி VFX ஸ்டுடியோ, NY VFXwalla நிறுவனம் ஆதிபுருஷின் CG/ஸ்பெஷல் எஃபெக்ட்களில் வேலை செய்யவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது. ஒரு சில ஊடகவியலாளர்கள் எங்களிடம் கேட்டதால், நாங்கள் இதைப் பதிவு செய்கிறோம்' என்றும் அவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தெளிவுபடுத்தியது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: Actor prabhas