ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

மீண்டும் ஹீரோவாக நடிக்கும் ஜி.வி. பிரகாஷ்… புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது

மீண்டும் ஹீரோவாக நடிக்கும் ஜி.வி. பிரகாஷ்… புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது

நாயகி அனஸ்வராவுடன் ஜி.வி. பிரகாஷ்

நாயகி அனஸ்வராவுடன் ஜி.வி. பிரகாஷ்

ஜிவி பிரகாஷ் – அனஸ்வரா நடிக்கும் படத்தை உதய் மகேஷ் இயக்குகிறார். இவர் முன்னதாக நாளை மற்றும் சக்கர வியூகம் ஆகிய படங்களை இயக்கியுள்ளார்

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் ஹீரோவாக நடிக்கவுள்ள படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது. இந்த படத்தை பிரபல நிறுவனமான கவிதாலயா தயாரிக்கிறது.

  பல்வேறு ஹிட் படங்களுக்கு இசையமைத்துள்ள ஜி.வி.பிரகாஷ் தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக இருந்து வருகிறார். தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர், விக்ரம் நடிக்கும் தங்கலான், சூர்யா – வெற்றிமாறன் இணையும் வாடிவாசல் உள்ளிட்ட மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களுக்கு ஜி.வி.பிரகாஷ் தான் இசையமைக்கிறார்.

  இசை பணிகளுக்கு இடையே, சில படங்களில் ஜி.வி. பிரகாஷ் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு அவரது நடிப்பில் வெளிவந்த பேச்சலர் திரைப்படம் ஓரளவு வரவேற்பை பெற்றது.

  இதன்பின்னர் இசை பணிகளில் பிரகாஷ் கவனம் செலுத்தி வந்த நிலையில் அடுத்த படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது. இந்த படத்தை கவிதாலயா நிறுவனம் தயாரிக்கிறது. குடும்பம் மற்றும் காமெடி ஜானரில் உருவாகவுள்ள இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக மலையாள இளம் நடிகை அனஸ்வரா ராஜன் இடம்பெற்றுள்ளார்.

  மனசுக்கு நெருக்கமான காதல் காவியங்கள்.. தமிழ் சினிமாவின் எவர் கிரின் லவ் மூவிஸ்!

  அனஸ்வரா நடிகை த்ரிஷா நடிக்கும் ராங்கி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகிறார். ஜிவி பிரகாஷ் – அனஸ்வரா நடிக்கும் படத்தை உதய் மகேஷ் இயக்குகிறார். இவர் முன்னதாக நாளை மற்றும் சக்கர வியூகம் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். கபாலி, தங்கமகன், ஜீவா, வேலைக்காரன், நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட படங்களில் உதய் மகேஷ் நடித்துள்ளார்.

  மறைந்த இயக்குனர் பாலச்சந்தரால் 1981-ல் தொடங்கப்பட்ட கவிதாலயா நிறுவனம் ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து படங்களை தயாரித்துள்ளது. கடைசியாக 2008-ல் ரஜினியின் குசேலன், அர்ஜுன் நடித்த திருவண்ணாமலை படங்களுன் அடுத்த படங்களை இந்த நிறுவனம் தயாரிக்காமல் இருந்தது.

  PHOTOS : ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாகும் மலையாள சினிமாவின் இளம் நடிகை…

  இந்த நிலையில் மீண்டும் திரைக் களத்திற்கு வந்துள்ள கவிதாலயா, டிஸ்னி ஹாட்ஸ்டாருடன் இணைந்து ஜிவி பிரகாஷ் நடிக்கும் படத்தை தயாரிக்கிறது.

  Published by:Musthak
  First published: