Home /News /entertainment /

கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டார் இசையமைப்பாளர் தமன்...

கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டார் இசையமைப்பாளர் தமன்...

கடந்த ஆண்டில் மட்டும் 10 படங்களுக்கு இசையமைத்திருந்த தமன், தற்போது 12 படங்களுக்கு இசையமைத்து வருகிறார். விஜய் நடிப்பில் உருவாகவுள்ள அவரது 66வது படத்திற்கு தமன் இசையமைப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

    தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக இருக்கும் தமன், கொரோனா பாதிப்பிலிருந்து குணம் அடைந்துள்ளார். கொரோனா தடுப்பு விதிகளை பொதுமக்கள் தவறாமல் கடைபிடிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

    இதுதொடர்பாக தமன் தனது சமூக வலைதள பக்கங்களில் கூறியிருப்பதாவது-

    கொரோனா பரிசோதனையில் எனக்கு நெகடிவராக ரிசல்ட் வந்துள்ளது. நான் குணமடைந்து வருகிறேன். நான் நலம்பெற வாழ்த்திய, பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனது மருத்துவர்கள் என்னை நன்றாக பார்த்துக் கொண்டார்கள். அவர்களுக்கும் நன்றி. எனது குழுவில் இருப்பவர்கள் என்னை குழந்தையைப் போல் பார்த்துக் கொண்டார்கள். அவர்களுக்கும் நன்றி.

    தயவு செய்து, கொரோனா பாதுகாப்பு விதிகளை பொதுமக்கள் தவறாமல் கடைபிடிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். தடுப்பூசி செலுத்தாதவர்கள், உடனடியாக தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள். மாஸ்க் அணியுங்கள் மக்களே. என்றும் உங்கள் ஆதரவையும், வாழ்த்துக்களையும் நாடுகிறேன்.

    இவ்வாறு தமன் கூறியுள்ளார். பாய்ஸ் படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமாகிய தமன், தற்போது தெலுங்கில் மோஸ்ட் வான்ட்டட் இசையமைப்பாளராக உள்ளார்.

    கடந்த ஆண்டில் மட்டும் 10 படங்களுக்கு இசையமைத்திருந்த தமன், தற்போது 12 படங்களுக்கு இசையமைத்து வருகிறார். விஜய் நடிப்பில் உருவாகவுள்ள அவரது 66வது படத்திற்கு தமன் இசையமைப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

    முன்னதாக இன்று பிரபல நடிகை கீர்த்தி சுரேஷுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இதுதொடர்பாக கீர்த்தி தனது சமூக வலைதள பக்கங்களில், 'லேசான அறிகுறிகளுடன் எனக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மிகுந்த கவனமாக இருந்து அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டேன். இருப்பினும், எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வைரஸ் பரவலின் வேகம் நம்மை அச்சுறுத்துகிறது.

    இதையும் படிங்க : நான் தரக்குறைவாக எதுவும் சொல்லவில்லை - சாய்னா ட்வீட் குறித்து சித்தார்த் விளக்கம்

    தயவு செய்து கொரோனா தடுப்பு விதிமுறைகள் அனைத்தையும் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும். நான் இப்போது என்னை தனிமைப்படுத்திக் கொண்டதுடன், கொரோனாவுக்கான சிகிச்சை எடுத்து வருகிறேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள், தங்களை பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இதுவரைக்கும் தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் இருந்தால், அவசியம் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள். இதை செய்தால் மட்டுமே உங்களையும், உங்கள் அன்புக்கு உரியவர்களையும் பாதுகாக்க முடியும்.' என்று கூறியிருந்தார்.

    சில நாட்களுக்கு முன்பு முன்னணி நடிகை திரிஷாவுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க : அவரை எனக்குப் பிடிக்கும் - சித்தார்த் ட்வீட்டுக்கு பதிலடி தந்த சாய்னா நேவால்!
    Published by:Musthak
    First published:

    Tags: Cinema

    அடுத்த செய்தி