இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கிய ’அட்டக்கத்தி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையில் இசையமைப்பாளராக அறிமுகமானார் சந்தோஷ் நாராயணன். ‘ஆடி போனா ஆவணி’ என்ற ஆட்டம்போட வைக்கும் பாடல்….,… ‘ஆசை ஓர் புல்வெளி’ என்ற மென்மையான மெலடி பாடல் என ரசிக்கும் பாடல்களை கொடுத்து அனைத்து ஏரியாவிலும் தான் கில்லி என்பதை தன் முதல் திரைப்படத்திலேயே நிரூபித்தார் சந்தோஷ் நாராயணன்.
இன்றைய தமிழ் சினிமாவின் பாடல்களே இல்லாமல் கூட திரைப்படங்கள் வெளிவரலாம்…. ஆனால் பின்னணி இசை இல்லாமல் ஒரு படம் கூட வெளியாவது சாத்தியமில்லை. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த ‘பீட்சா’ திரைப்படத்தில். பிளாக் காமடி நிறைந்த த்ரில்லர் கதையில் சந்தோஷ் நாராயணின் பின்னணி இசை கதையோடு கை கோர்த்து பார்வையாளர்கள் இதயத்தை திக் திக் ஆக்கியது.. இத்திரைப்படத்தின் மூலம் பின்னணி இசையிலும் கவனிக்கப்பட வைத்தார் சந்தோஷ் நாராயணன்.
’குக்கூ’ திரைப்படத்தின் இனிமையான பாடல்கள் ரசிகர்களின் செவியிலே காதல் ரசத்தை சொட்ட செய்தது. அதேபோல் கார்த்திக் சுப்புராஜின் ஜிகர்தண்டாவில் மேற்கத்திய இசையோடு குத்தாட்டம் போட்ட சந்தோஷ் நாராயணன் "மெட்ராஸ்". திரைப்படத்தில் தன் இசையால் அந்த ஆகாயத்தையே தீ பிடிக்க வைத்தார். ஆம்.. ’ஆகாயம் தீ பிடிச்சா நிலா தாங்குமா’ பாடலில் . ஓர் ஆகாச காதலை இசைத்திருந்தார் சந்தோஷ் நாராயணன்.
” ஏ சண்ட காரா… கண்ணு முழியில ரெண்டு உயிர தேடி பாயுது” என "இறுதிச்சுற்று" திரைப்படத்தில் ஒலித்த இவரது பாடல் மாநகர பஸ்… மப்சல் பஸ்.. மினி பஸ் என எங்கும் ஒலித்து இசை ரசிகர்களின் உயிரை தோண்டி எடுத்தது.
ரஜினிகாந்தின் “கபாலி” திரைப்படத்தில் "நெருப்புடா...நெருங்குடா" எனும் பாட்டால் தமிழ்நாட்டையே பற்றி எரிய வைத்த சந்தோஷ் நாராயணன், "மாயநதி" எனும் பாடலால் உருக வைத்து அத்தீயை அணைக்கவும் செய்தார்.
விஜய்க்கு "பைரவா", தனுஷ்க்கு "கொடி", "வடசென்னை", என சந்தோஷ் நாராயணின் இசை சாம்ராஜ்ஜியம் விரிந்தது. சந்தோஷ் நாராயணன் பா.ரஞ்சித் கூட்டணியில் ரஜினிகாந்தின் நடிப்பில் வெளிவந்த "காலா" திரைப்படம் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்து ’கண்ணம்மா’ பாடலின் மூலம் ஒரு மீட்டாத மேகத்தை மீட்டி சென்றார் சந்தோஷ் நாராயணன்..
‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்தில் "கருப்பி" பாடல் … கர்ணனில் ’:கண்டா வரச்சொல்லுங்க..கர்ணனை கையோடு கூட்டி வாருங்க பாடல் என தனிப்பெரும் சுவையாக ஒலித்த சந்தோஷ் நாராயணனின் இசை, ரசிகர்களின் ரகிட ரகிட இசையாக என்றுமே மனதில் நிற்கும்.
Published by:Musthak
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.