ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கு கோல்டன் விசா… ஐக்கிய அரபு அமீரகத்தில் கவுரவம்

இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கு கோல்டன் விசா… ஐக்கிய அரபு அமீரகத்தில் கவுரவம்

கோல்டன் விசாவை பெறும் வெங்கட் பிரபு

கோல்டன் விசாவை பெறும் வெங்கட் பிரபு

Golden visa Venkat Prabhu : திரைத்துறையினர் அதிகமானோருக்கு ஐக்கிய அரபு அமீரக கோல்டன் விசா வழங்கப்பட்டு வருகிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசா வழங்கி கவுரவப்படுத்தப்பட்டுள்ளது.

  தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் வெங்கட் பிரபு. இவரது இயக்கத்தில் வெளிவந்த சென்னை 28, மங்காத்தா, மாநாடு படங்கள் மிகப்பெரும் வெற்றியை பெற்றுள்ளன.

  தற்போது தெலுங்கு முன்னணி நடிகர் நாக சைதன்யாவுடன் இணைந்து படம் ஒன்றை வெங்கட் பிரபு உருவாக்கி வருகிறார். இந்த படத்திற்கான பாடல் பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.

  தமிழ் மற்றும் தெலுங்கு என 2 மொழிகளில் இந்த படம் உருவாக உள்ளது. இன்னும் பெயரிடப்படாத இந்த படத்திற்கு இளையராஜாவும், யுவன் சங்கர் ராஜாவும் இசையமைத்து வருகின்றனர்.

  Also read... திரையுலகில் என்றும் 16-ஆக ஜொலிக்கும் நடிகை த்ரிஷா 

  இந்தநிலையில் வெங்கட் பிரபுவுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது.

  ஐக்கிய அரபு அமீரகத்தில் வெளிநாட்டை சேர்ந்தவர்களுக்கு கோல்டன் விசா வழங்கப்படுகிறது. 10 ஆண்டுகளுக்கு இந்த விசா செல்லுபடியாகும். கோல்டன் விசாவை பெற்றவர்கள் இந்த 10 ஆண்டுகளுக்கு ஐக்கிய அரபு அமீகரத்தில் தங்குவதற்கு, வேலை மற்றும் படிப்புக்காக அனுமதிக்கப்படுவார்கள்.

  தற்போது திரைத்துறையினர் அதிகமானோருக்கு ஐக்கிய அரபு அமீரக கோல்டன் விசா வழங்கப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கை அந்நாட்டின் சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்கு மேலும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  இதையும் படிங்க - கார்த்தி திரைப்படத்தை கைப்பற்றிய உதயநிதி ஸ்டாலின்

  விஜய் சேதுபதி, த்ரிஷா, பார்த்தபன், ஏ.ஆர். ரகுமான், மம்மூட்டி, அவரது மகன் துல்கர் உள்ளிட்ட பல் வேறு திரையுலக நட்சத்திரங்கள் கோல்டன் விசாவை பெற்றுள்ளனர்.

  Published by:Musthak
  First published:

  Tags: Venkat Prabhu