ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகும் பிரபல தொழிலதிபரின் மகன்…

சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகும் பிரபல தொழிலதிபரின் மகன்…

கிரீத்தி ரெட்டி

கிரீத்தி ரெட்டி

கன்னடம் மட்டுமல்லாமல் தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் வெளியாகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவரும்,  தொழிலதிபருமான ஜனார்த்தனன் ரெட்டி மகன் திரைத்துறையில் நாயகனாக அறிமுகமாகிறார்.

கர்நாடகாவை சேர்ந்த ஜனார்த்தனன் ரெட்டி, பாரதிய ஜனதா கட்சியில் முக்கிய நபராக வலம் வந்தார்.  இவருடைய மகன் க்ரீட்டி தற்போது திரைத்துறையில் நாயகனாக அறிமுகமாகிறார்.

ஜூனியர் என பெயர் வைக்கப்பட்டிருக்கும் அந்த திரைப்படத்தை ராதாகிருஷ்ணன் ரெட்டி என்பவர் இயக்குகிறார்.  அதே போல் விஜய்,  தனுஷ் உள்ளிட்ட முன்னணி நாயாகர்களின் படத்தில்  நாயகியாக நடித்த ஜெனிலியா இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

கார்த்தி நடிக்கும் ‘சர்தார்’ படத்தின்ரிலீஸ் தேதி அறிவிப்பு…

இவர்களை தவிர பிரபல தொழில்நுட்ப கலைஞர்களை ஜூனியர் படத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளனர்.  குறிப்பாக பாகுபலி, ஆர்.ஆர்.ஆர். படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த செந்தில்குமார் இந்த திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.  அதேபோல் பிரபல இசையமைப்பாளரான தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

இந்த திரைப்படம் ஆக்சன் முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படுகிறது. இதன் காரணமாக தமிழ் - தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி சண்டை பயிற்சி இயக்குனராக உள்ள  பீட்டர் ஹெய்ன் சண்டைக் காட்சிகளை அமைக்கிறார்.

விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியனின் ரகெட் லுக் படங்கள்!

இந்த  திரைப்படம் கன்னடம்  மட்டுமல்லாமல் தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் வெளியாகிறது. இது க்ரீட்டியின் முதல் படமாக இருந்தாலும் மிகப்பெரிய பொருட்ச் செலவில் ஜூனியர் திரைப்படத்தை உருவாக்கி வருகிறார்கள் என கூறப்படுகிறது.

Published by:Musthak
First published:

Tags: Kollywood