OTT-யில் நேரடியாக வெளியாகும் ராகவா லாரன்ஸின் பாலிவுட் படம்

லக்‌ஷ்மி பாம் என்ற பாலிவுட் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

OTT-யில் நேரடியாக வெளியாகும் ராகவா லாரன்ஸின் பாலிவுட் படம்
லக்‌ஷ்மி பாம்
  • Share this:
கொரோனா அச்சுறுத்தலால் இந்தியா முழுவதும் தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருக்கிறது. திரையரங்குகள் திறக்கப்படாததால் படங்கள் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ரிலீசுக்கு தயாராக இருக்கும் திரைப்படங்களை குறி வைக்கும் ஓடிடி தளங்கள் அவற்றை கைப்பற்றி நேரடியாக ரிலீஸ் செய்து வருகின்றன.

2011-ம் ஆண்டு ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான படம் லக்‌ஷ்மி பாம் என்ற பெயரில் பாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. ராகவா லாரன்ஸ் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் அக்‌ஷ்ய்குமார் நாயகனாகவும், கியாரா அத்வானி நாயகியாகவும் நடித்துள்ளார்கள். இந்தப் படம் மே 22-ம் தேதி திரைக்கு வருவதாக இருந்த நிலையில், தற்போது டிஸ்னி ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாலிவுட்டில் ஸ்டாராக வலம் வரும் அக்‌ஷய்குமாரின் லக்‌ஷ்மி பாம் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாவது திரையுலக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க: நீருக்குள் நடனம்... ஸ்ருதிஹாசனின் வித்தியாசமான போட்டோ ஷூட்

இந்தப் படம் தவிர, சதக் 2, குதா ஹபிஸ், பூஜ்: தி பிரைட் ஆஃப் இந்தியா உள்ளிட்ட சில படங்களும் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் நேரடியாக ரிலீசாகிறது. இந்தப் படங்களில் சுஷாந்த் சிங் நடித்துள்ள தில் போச்சாரா முதல் படமாக ஓடிடியில் வெளியாகிறது.
First published: June 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading