முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / பார்வதியம்மாளுக்கு வீடு கட்டித் தரும் முடிவை மாற்றிய லாரன்ஸ்!

பார்வதியம்மாளுக்கு வீடு கட்டித் தரும் முடிவை மாற்றிய லாரன்ஸ்!

லாரன்ஸ் - பார்வதி அம்மாள்

லாரன்ஸ் - பார்வதி அம்மாள்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார் லாரன்ஸ்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ஜெய் பீம் படம் இந்த வருடம் அதிக அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இருளர், பழங்குடியினர் இந்தியாவில் எப்படி நடத்தப்படகிறார்கள் என்பதை அவர்களின் வாழ்வியலோடு ஜெய் பீம் சொன்னது.

தமிழ்நாட்டிந்கு வெளியேயும் படம் பெரும் வரவேற்பை பெற்றது.

மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு இருளர், பழங்குடியினருக்காக இலவச வீட்டு மனைப்பட்டா, இலவச வீடு என பல்வேறு நலத்திட்டங்களை முன்னெடுத்துள்ளது. ஜெய் பீம் படத்தைப் பார்த்த நடிகர் லாரன்ஸ், படத்தில் வரும் செங்கேணி கதாபாத்திரத்தின் நிஜ நபரான பார்வதி அம்மாளுக்கு வீடு கட்டித் தருவதாக அறிவித்தார். தற்போது அந்த எண்ணத்தை மாற்றியுள்ளார். அது குறித்து அறிக்கை ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.

"ஜெய் பீம் படத்தின் உண்மைக் கதாநாயகனான ராசாக்கணணுவின் மனைவி பார்வதி அம்மாள் வறுமை நிலையில் வாழ்ந்து வருவதை அறிந்த பிறகு, பார்வதி அம்மாவுக்கு எனது செலவில் வீடு கட்டிக் கொடுப்பதாக உறுதியளித்திருந்தேன்.

பார்வதி அம்மாவை நேரில் சந்தித்தும் அவரிடம் இதுபற்றி தெரிவித்தேன். அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகில் உள்ள கீழநத்தம் கிராமத்தில் பார்வதி அம்மாளின் மகளுக்கு நிலம் உள்ளது என்றும் அந்த இடத்தில் வீடு கட்டித் தரும்படியும் கேட்டுக் கொண்டனர். அதன்படி சில நாள்களுக்கு முன் கீழநத்தம் கிராமத்துக்கே சென்று வீடு கட்டுவதற்கான நிலத்தை பார்வையிட்டு வந்தோம். விரைவில் வீடு கட்டும் பணியைத் தொடங்கும் முயற்சியில் இருந்த நிலையில் பார்வதி அம்மாவுக்கு அரசு சார்பில் வீடு கட்டித்தர இருப்பதாக தொலைக்காட்சி செய்தி மூலம் அறிந்து மகிழ்ச்சியடைந்தேன்.

பார்வதி அம்மாவின் இன்றைய வறுமை நிலையை அறிந்து அவருக்கு வாழ்விடத்தை கட்டிக் கொடுக்க முன்வந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பார்வதி அம்மாளுக்கு வீடு கட்டித் தருவதற்காக நான் ஒதுக்கிய 5 லட்சத்துடன் மேலும் 3 லட்சம் சேர்த்து பார்வதி அம்மாள், அவருடைய மகள், மற்றும் அவருடைய இரு மகள்கள் ஆகியோருக்கு தலா இரண்டு லட்சங்களை வழங்க முடிவு செய்துள்ளேன்." என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Actor Raghava lawrence