ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

‘திருமணம் அறிவிப்பில் மாற்றம் இல்லை’ – விடாப்பிடியாய் நிற்கும் விஷால்…

‘திருமணம் அறிவிப்பில் மாற்றம் இல்லை’ – விடாப்பிடியாய் நிற்கும் விஷால்…

லத்தி பட நடிகை சுனைனாவுடன் விஷால்

லத்தி பட நடிகை சுனைனாவுடன் விஷால்

விஷால் நடிப்பில் கடைசியாக வெளிவந்த வீரமே வாகை சூடும், எனிமி, ஆக்சன் படங்கள் எதிர்பார்த்த வெற்றியை அளிக்கவில்லை.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  திருமணம் குறித்து தான் ஏற்கனவே அறிவித்த விளக்கத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று நடிகர் விஷால் கூறியுள்ளார்.

  விஷால் – சுனைனா நடிப்பில் லத்தி என்ற படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் வெளியிட விஷால் திட்டமிட்டுள்ளார். இந்த படத்தை வினோத் குமார் இயக்கியுள்ளார்.

  லத்தி படத்திலிருந்து சமீபத்தில் வெளியான டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது. அடுத்ததாக ஊஞ்சல் ஆடும் என்ற பாடல் வெளியிடப்பட்டு அந்த பாடல் கவனம் ஈர்த்துள்ளது. லத்தி படத்தை வரும் கிறிஸ்துமஸ் விடுமுறையையொட்டி திரைக்கு கொண்டு வரும் முயற்சியில் விஷால் இறங்கியுள்ளார்.

  இந்நிலையில் லத்தி படத்தின் தெலுங்கு டீசர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா ஐதராபாத்தில் நேற்று நடைபெற்றது. இதில் விஷால் பேசியதாவது-

  திருமணம் குறித்து நான் முன்பு அறிவித்ததில் எந்த மாற்றமும் கிடையாது. தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கட்டிடத்தை முதலில் கட்டி முடிக்க வேண்டும். அதன்பின்னர் வரக்கூடிய முதல் முகூர்த்தத்தில் எனது திருமணம் நடக்கும்.

  படத்த பார்த்துட்டு போன் பண்ணவே இல்லை.. கேப்டன் குறித்து ஆர்யாவை கிண்டலடித்த உதயநிதி

  3500 நடிகர்கள், நாடக கலைஞர்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதற்கு எனது குழுவினர் பணியாற்றி வருகிறார்கள். நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிந்த பின்னர் எனது திருமணம் நடக்கும். அதற்கு எல்லோரையும் அழைப்பேன்.

  ' isDesktop="true" id="836807" youtubeid="ZBvwFf4u0TA" category="cinema">

  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

  இது தான் என் நிரந்தர வீடு... எமோஷனலான சன்னி லியோன்!

  இந்த விழாவில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, தயாரிப்பாளர்கள் ராணா, நந்தா,வலிமை படத்தின் வில்லன் கார்த்திகேயா, ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நடிகர் விஷால் கடந்த 20 ஆண்டுகளாக சினிமாவில் இருந்து வருகிறார். 45 வயதாகும் அவர் சில நடிகைகளுடன் இணைத்து பேசப்பட்டிருந்தார்.

  விஷால் நடிப்பில் கடைசியாக வெளிவந்த வீரமே வாகை சூடும், எனிமி, ஆக்சன் படங்கள் எதிர்பார்த்த வெற்றியை அளிக்கவில்லை. இதனால் லத்தி திரைப்படம் மீண்டும் தன்னை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் என்ற எதிர்பார்ப்பில் விஷால் உள்ளார்.

  Published by:Musthak
  First published:

  Tags: Actor vishal