முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் லதா ரஜினிகாந்த்?

ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் லதா ரஜினிகாந்த்?

லதா - ரஜினிகாந்த்

லதா - ரஜினிகாந்த்

'ஜெயிலர்' படத்தில் அவரது புகைப்படம் இடம்பெற்றிருப்பதற்கான காரணம் என்னவென்று அறிந்துக்கொள்ள ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • tamil na, India

ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் அவரது மனைவி லதா ரஜினிகாந்த் நடிக்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

நடிகர் ரஜினிகாந்தின் 72வது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக 'ஜெயிலர்' படத்தின் முதல் பார்வை டீசர் வெளியிடப்பட்டது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தில் ரஜினியின் கதாபாத்திரமான முத்துவேல் பாண்டியனை அறிமுகப்படுத்தும் விதத்தில் வீடியோ வெளியானது.

இந்த 'ஜெயிலர்' க்ளிம்ப்ஸ் டீசரில் ரஜினி மற்றும் அவரது மனைவி லதா ரஜினிகாந்தின் புகைப்படம் இருப்பது ரசிகர்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆகையால் இந்த படத்தில் லதா நடித்துள்ளாரா? பிளாஷ்பேக் காட்சிகளில் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் இருக்குமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

லதா இதற்கு முன்பு 'அன்புள்ள ரஜினிகாந்த்' படத்தில் ரஜினியின் மனைவியாக இடம்பெற்றிருந்தார். இருப்பினும் அதில் அவரின் குரலும், கைகளும் மட்டுமே காட்டப்பட்டன. அதோடு அந்தப் படத்தின் டைட்டில் பாடலையும் பாடினார். தனது கணவர் நடித்த 'மாவீரன்' மற்றும் 'வள்ளி' ஆகிய இரண்டு படங்களையும் கூட தயாரித்திருந்தார் லதா ரஜினிகாந்த். இதையடுத்து 'ஜெயிலர்' படத்தில் அவரது புகைப்படம் இடம்பெற்றிருப்பதற்கான காரணம் என்னவென்று அறிந்துக்கொள்ள ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.

சினிமாவில் 20 ஆண்டுகளை கடந்த த்ரிஷா... குவியும் வாழ்த்துகள்!

'ஜெயிலர்' படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், விநாயகன், யோகி பாபு, வசந்த் ரவி, அறந்தாங்கி நிஷா, பருத்திவீரன் சரவணன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படம் அடுத்த ஆண்டு தமிழ் புத்தாண்டுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Rajinikanth