• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ரஜினிகாந்த் நலமாக உள்ளார் - லதா ரஜினிகாந்த் விளக்கம்

ரஜினிகாந்த் நலமாக உள்ளார் - லதா ரஜினிகாந்த் விளக்கம்

ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்த்

ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்த்

ரஜினி உடல்நலம் குறித்து கவலைப்பட ஏதுமில்லை. அவர் நலமாக உள்ளார் என்று லதா ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.

  • Share this:
    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்துவருபவர் ரஜினிகாந்த். அவரது திரைப்படங்கள் தமிழ் சினிமாவைத் தாண்டி இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்துவது வழக்கமான ஒன்று. சுமார், 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்துவருகிறார். இந்தநிலையில், 2011-ம் ஆண்டு அவருக்கு உடல்நலக் குறைபாடு ஏற்பட்டது. அதனையடுத்து, சிங்கப்பூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ரஜினிகாந்த்துக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.

    70 வயதைக் கடந்திருக்கும் ரஜினிகாந்த் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டதன் காரணமாக, அவ்வப்போது அமெரிக்கா சென்று உடல்நலம் குறித்து சோதனை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். எனவே, அவர் மருத்துவச் சிகிச்சைக்கு செல்லும் செய்திகள் தலைப்புச் செய்திகளாக இடம் பெறுவது வழக்கமாக இருந்துவருகிறது.

    இந்தநிலையில், ரஜினிகாந்த் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக தனியார் மருத்துவமனைக்கு மாலை 5 மணி அளவில் வருகை புரிந்தார். பின்னர் மாதாந்திர சிகிச்சை பெற்ற பிறகு இல்லம் திரும்பினார். இதுகுறித்து நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு விளக்கமளித்த லதா ரஜினிகாந்த், ‘ரஜினிகாந்த்தின் உடல்நிலை குறித்து கவலைப்பட எதுவும் இல்லை. அவர் நலமாக உள்ளார்’ என்று தெரிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: