போயஸ் கார்டன் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு கேட்ட லதா ரஜினிகாந்த்!

போயஸ் தோட்டத்தில் இருக்கும் தனது இல்லத்துக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கக் கோரி லதா ரஜினிகாந்த் தேனாம்பேட்டை E3 - காவல்நிலையத்துக்கு மனு அளித்துள்ளார்.

news18
Updated: January 31, 2019, 5:09 PM IST
போயஸ் கார்டன் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு கேட்ட லதா ரஜினிகாந்த்!
லதா ரஜினிகாந்த்
news18
Updated: January 31, 2019, 5:09 PM IST
போயஸ் தோட்டத்திலிருக்கும் தனது வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டு லதா ரஜினிகாந்த் மனு அளித்துள்ளார்.

ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யா ரஜினிகாந்துக்கும், தொழில் அதிபர் அஸ்வினுக்கும் கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு வேத் என்ற மகன் உள்ளார்.

சவுந்தர்யா-அஸ்வின் இடையே திடீர் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் 2 வருடங்களுக்கு முன்பு இருவரும் விவாகரத்து செய்தனர். அதன் பிறகு தனது மகனுடன் தனியாக வசித்து வந்தார் சவுந்தர்யா.

இந்த நிலையில் சவுந்தர்யாவுக்கு தற்போது விசாகன் என்பவருடன் திருமணம் நிச்சயமாகி உள்ளது. விசாகன் அமெரிக்காவில் எம்.பி.ஏ. படித்தவர். ‘வஞ்சகர் உலகம்’ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள விசாகன், படத்தயாரிப்பு நிறுவனமும் நடத்துகிறார்.சவுந்தர்யா-விசாகன் திருமண நிச்சயதார்த்தம் இரு வீட்டு பெற்றோர் சம்மதத்துடன் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது. இவர்களுடைய திருமணம் பிப்ரவரி 10-ம் தேதி சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் இல்லத்தில் நடைபெறுகிறது.திருமணத்துக்குப் பின் வரவேற்பு நிகழ்ச்சி 12-ம் தேதி நடைபெறுகிறது. இதில் பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்ள இருப்பதால் போயஸ் தோட்டத்தில் இருக்கும் தனது இல்லத்துக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கக் கோரி லதா ரஜினிகாந்த் தேனாம்பேட்டை E3 - காவல்நிலையத்துக்கு மனு அளித்துள்ளார்.

வடிவேலு காமெடி பாணியில் நடந்த மோசடி... ஊரணியை காணவில்லை - வீடியோ

First published: January 31, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...