ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ஆரம்பிக்கலாங்களா? விஜய் - லோகேஷின் 'தளபதி 67' ஷூட்டிங் எப்போ ? எங்கே? வேற லெவல் அப்டேட்

ஆரம்பிக்கலாங்களா? விஜய் - லோகேஷின் 'தளபதி 67' ஷூட்டிங் எப்போ ? எங்கே? வேற லெவல் அப்டேட்

லோகேஷ் கனகராஜ் - விஜய்

லோகேஷ் கனகராஜ் - விஜய்

லோகேஷின் எல்சியூ படி இந்தப் படத்தில் தில்லியாக கார்த்தி, ரோலெக்ஸாக சூர்யா போன்றவர்களும் இடம்பெறுவார்களா என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உருவாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

வாரிசு படம் பொங்கலுக்கு வெளியாகும் நிலையில் வாரிசா துணிவா என்ற பஞ்சாயத்துகள் ஒருபுறம் இருக்க, தற்போது சுடசுட தளபதி 67 படம் பற்றிய தகவல் கிடைத்துள்ளது. லோகேஷ் இயக்கவிருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் சென்னையில் துவங்கவிருக்கிறது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் பிரம்மாண்டமான பேன் இந்தியன் படமாக உருவாகவிருக்கிறது. முன்னதாக இந்தப் படமும் லோகேஷின் சினிமாட்டிக் யூனிவர்ஸின் அடிப்படையில் உருவாகவிருப்பதாக லோகேஷ் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நாளை சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் படப்படிப்பு துவங்கவிருக்கிறது. ஏற்கனவே இந்தப் படத்தின் பூஜை மற்றும் புரோமோ படப்பிடிப்பு நிறைவடைந்தது. இந்த நிலையில்சென்னையில் நாளை முதல் 10 நாட்கள் நடைபெறும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்தாக காஷ்மீரில் நடைபெறுகிறது. அங்கு 50 நாட்கள் நடைபெறவிருப்பதாக கூறப்படுகிறது.

வாரிசு படத்தை விட தளபதி 67 படத்துக்காக தான் ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். இயக்குநர் லோகேஷ் எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் அவரிடம் கேட்கப்படும் முதல் கேள்வி தளபதி 67 அப்டேட் தான். அந்த அளவுக்கு ரசிகர்கள் அந்தப் படத்தின் மீது ஆர்வமாக இருக்கிறார்கள். அதற்கு காரணம் விக்ரம் படத்தின் பிரம்மாண்ட வெற்றி. கடந்த ஆண்டு வெளியான விக்ரம் பட இந்திய அளவில் அதிக கவனம் பெற்றது. நடிகராக கமல்ஹாசனுக்கு நீண்ட இடைவேளைக்கு பிறகு  திருப்புமுனை ஏற்படுத்திய படமாக அமைந்ததுடன், ஒரு தயாரிப்பாளராக அவருக்கு மாபெரும் வசூல் சாதனையையும் படைத்தது.

தளபதி 67 படத்தில் விஜய்யுடன் அர்ஜுன், திரிஷா, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் ஆகியோர் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய்யுடன் திரிஷா இணைந்து நடிக்கவிருப்பதால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள். மேலும் லோகேஷின் எல்சியூ படி இந்தப் படத்தில் தில்லியாக கார்த்தி, ரோலெக்ஸாக சூர்யா போன்றவர்களும் இடம்பெறுவார்களா என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உருவாகியுள்ளது.

First published:

Tags: Actor Thalapathy Vijay, Actress Trisha, Lokesh Kanagaraj