ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

இறுதிக் கட்டத்தை நெருங்கும் 'வாரிசு' ஷூட்டிங்… தளபதி 67 அறிவிப்பு எப்போது தெரியுமா?

இறுதிக் கட்டத்தை நெருங்கும் 'வாரிசு' ஷூட்டிங்… தளபதி 67 அறிவிப்பு எப்போது தெரியுமா?

வாரிசு படத்தில் விஜய்

வாரிசு படத்தில் விஜய்

வாரிசு படத்திலிருந்து ஏற்கனவே 3 போஸ்டர்கள் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளன.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  விஜய் நடித்துவரும் வாரிசு படத்தின் படப்பிடிப்பு, எப்போது நிறைவுபெறும் என்பது குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன. இதன் பின்னர் உடனடியாக லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள தளபதி 67 படத்தில், விஜய் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  தெலுங்கு முன்னணி இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில், தில் ராஜூ தயாரிப்பில் விஜய் ‘வாரிசு’ என்ற படத்தில் நடித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் இந்தப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

  இவர்களுடன் சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, ஷாம், ஸ்ரீகாந்த், யோகிபாபு, சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்டோர் படத்தில் இடம்பெற்றுள்ளனர். தெலுங்கு சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் தமன் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

  Filmfare 2022: ஃபிலிம்பேரில் விருதுகளை குவித்த சூரரைப்போற்று - சார்பட்டா பரம்பரை!

  வாரிசு படத்திலிருந்து ஏற்கனவே 3 போஸ்டர்கள் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளன. இந்த நிலையில் ஒட்டுமொத்த படப்பிடிப்பு இம்மாதம் 27ம் தேதிக்குள் நிறைவுபெறும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.

  இதன்பின்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள தளபதி படத்தில் விஜய் உடனடியாக இணைவார் என்று கூறப்படுகிறது. இருப்பினும் வாரிசு படத்தின் இறுதிகட்ட ஷெட்யூல் குறித்த அறிவிப்பை படக்குழுவினர் இன்னும் தெரிவிக்கவில்லை.

  விக்னேஷ்சிவன், நயன்தாராவிடம் வாடகைதாய் விவகாரம் குறித்து விளக்கம் கேட்கப்படும் - அமைச்சர் மா.சு!

  இதற்கிடையே தளபதி 67 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இம்மாதம் 23ஆம் தேதி வெளியாகும் என்று சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி உள்ளன. இந்த படம் மிக அதிக ஆக்சன் காட்சிகள் கொண்டதாக இருக்கும் என்று லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே கூறியிருந்தார். விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் அவரது விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், அவர் இயக்கவுள்ள விஜய் படம் பெரும் எதிர்பார்ப்பை கோலிவுட்டில் ஏற்படுத்தியுள்ளது.

  Published by:Musthak
  First published:

  Tags: Actor Vijay