ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

எப்புட்றா! விஜய்யின் 'தளபதி 67' - பக்கா பிளானுடன் களமிறங்கும் லோகேஷ் கனகராஜ்!

எப்புட்றா! விஜய்யின் 'தளபதி 67' - பக்கா பிளானுடன் களமிறங்கும் லோகேஷ் கனகராஜ்!

விஜய் - லோகேஷ் கனகராஜ்

விஜய் - லோகேஷ் கனகராஜ்

மே இறுதிக்குள் முதல் பிரதியை தயார் செய்ய விஜய் 67 படக்குழு திட்டம். 

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தயாரிப்பாளர் லலித்குமார் ஆகியோர் தளபதி 67 திரைப்படத்திற்காக இணைந்துள்ளனர்.  இந்தப் படத்துக்கும் அனிருத் இசையமைக்கிறார். வாத்தி கம்மிங் உள்ளிட்ட மாஸ்டர் பாடல்கள் அப்படத்துக்கு பெரும் பலமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி என ரசிகர்களின் மனம் கவர்ந்த விஜய் - திரிஷா ஜோடி இந்தப் படத்தில் இணைந்துள்ளது படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியுள்ளது. இந்த முதல் கட்ட படப்பிடிப்பு 10 நாட்கள் நடைபெறும் எனவும், அதில் விஜய் வரும் பத்தாம் தேதி வரை கலந்து கொள்வார் எனவும் கூறப்படுகிறது. ஆக்சன் ஃபார்முலாவில் உருவாக இருக்கும் இந்த திரைப்படத்தின் முதல் பிரதியை மே மாத இறுதிக்குள் தயார் செய்துவிட படக்குழுவினர் திட்டமிட்டு இருக்கின்றனர்.

குறிப்பாக வசனம், பின்னணி இசை என அனைத்தையும் சேர்த்து முடிக்கவும் திட்டமிட்டு இருக்கின்றனர். விஜய், லோகேஷ் கனகராஜ், லலித்குமார் கூட்டணியில் ஏற்கனவே உருவான மாஸ்டர் திரைப்படமும் குறைந்த கால தயாரிப்பில் உருவானது. அந்த திரைப்படம் மிகப்பெரிய லாபத்தை தயாரிப்பாளருக்கு கொடுத்தது. இந்த நிலையில் விஜய் 67 படத்தின் முதல் பிரதியை குறுகிய காலத்தில் தயார் செய்ய படக் குழுவினர் திட்டமிட்டு இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தில் நடிகர் விஜயுடன் திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

வாரிசு படத்தை விட தளபதி 67 படத்துக்காக தான் ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். இயக்குநர் லோகேஷ் எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் அவரிடம் கேட்கப்படும் முதல் கேள்வி தளபதி 67 அப்டேட் தான். அந்த அளவுக்கு ரசிகர்கள் அந்தப் படத்தின் மீது ஆர்வமாக இருக்கிறார்கள். அதற்கு காரணம் விக்ரம் படத்தின் பிரம்மாண்ட வெற்றி. கடந்த ஆண்டு வெளியான விக்ரம் பட இந்திய அளவில் அதிக கவனம் பெற்றது. நடிகராக கமல்ஹாசனுக்கு நீண்ட இடைவேளைக்கு பிறகு  திருப்புமுனை ஏற்படுத்திய படமாக அமைந்ததுடன், ஒரு தயாரிப்பாளராக அவருக்கு மாபெரும் வசூல் சாதனையையும் படைத்தது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Actor Thalapathy Vijay, Lokesh Kanagaraj, Vijay