Home /News /entertainment /

விக்ரமின் கோப்ரா பட ட்ரெய்லர் ரிலீஸ் தேதி இதுதான்…  விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…

விக்ரமின் கோப்ரா பட ட்ரெய்லர் ரிலீஸ் தேதி இதுதான்…  விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…

கோப்ரா படத்தில் விக்ரம்

கோப்ரா படத்தில் விக்ரம்

லலித் குமாரின் 7 ஸ்கிரீன் தயாரிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் கோப்ரா படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள கோப்ரா படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் ஆகும் தேதி குறித்த புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன. விரைவில் ட்ரெய்லர்வெளியாகும் தேதி தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரவுள்ளது.

    இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்துள்ள 'கோப்ரா' திரைப்படம் இந்த வருடத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும்.

    இப்படம் ஆகஸ்ட் 11-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், படத்தின் ரிலீஸ் ஆகஸ்ட் 31-ம் தேதிக்கு தள்ளிப்போகும் என சலசலப்பு நிலவியது. தற்போது கோப்ரா திரைப்படம் ஆகஸ்ட் 31-ம் தேதி திரைக்கு வரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    Laal Singh Chaddha Review : பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெறும் ஆமிர் கானின் லால் சிங் சத்தா திரைப்படம்…

    லலித் குமாரின் 7 ஸ்கிரீன் தயாரிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

    கோப்ரா டீசரைப் பார்க்க...



    முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் ‘கோப்ரா’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். இதில் அஸ்லான் இல்மாஸ் என்ற துருக்கிய இன்டர்போல் அதிகாரியாக அவர் நடிக்கிறார். கோப்ரா படத்தில் விக்ரம் 20-க்கும் மேற்பட்ட தோற்றங்களில் நடிக்கிறார்.

    கார்த்தி நடிக்கும் விருமன் படத்தின் Sneak – Peak சிறப்பு காட்சி வெளியீடு…

    விக்ரம், இர்பான் பதான் தவிர 'கேஜிஎஃப்' புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி, மிருணாளினி, லால், கனிகா, பத்மப்ரியா, பாபு ஆண்டனி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    இந்நிலையில் கோப்ரா படத்தின் ட்ரெய்லர் ஆகஸ்ட் 15ம்தேதி சுதந்திர தினத்தன்று வெளியாகும் என தகவல்கள் பரவியுள்ளது. நம்பத்தகுந்த வட்டாரங்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ள நிலையில் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Published by:Musthak
    First published:

    Tags: Actor Vikram, Cobra Movie

    அடுத்த செய்தி