ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

கமல் படத்தை இயக்கப் போகிறாரா எச்.வினோத்? கோலிவுட்டில் பரபரப்பு

கமல் படத்தை இயக்கப் போகிறாரா எச்.வினோத்? கோலிவுட்டில் பரபரப்பு

கமல் - எச்.வினோத்

கமல் - எச்.வினோத்

துணிவு படத்தை தொடர்ந்து எச்.வினோத் விஜய் சேதுபதியை இயக்குவார் என உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளிவந்துள்ளன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    கமல் படத்தை எச்.வினோத் இயக்கப் போவதாக வெளியாகியுள்ள தகவல் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படத்தின் இறுதிக் கட்ட பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இந்தப் படம் பொங்கலையொட்டி திரைக்கு வரவுள்ளது. நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக துணிவு படத்தில் அஜித் – எச்.வினோத் கூட்டணி இணைந்துள்ளது.

    துணிவு படத்தை தொடர்ந்து எச்.வினோத் விஜய் சேதுபதியை இயக்குவார் என உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளிவந்துள்ளன. அதே நேரம் அஜித் தனது அடுத்த படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் பண்ணவுள்ளார். லைகா தயாரிக்கும் இந்த படத்திற்காக விக்னேஷ் சிவன் தற்போது ப்ரீ புரொடக்சன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

    வாடிவாசல் படத்தின் கதை குறித்து வெற்றிமாறன் வெளியிட்ட புதிய தகவல்… சூர்யா ரசிகர்கள் உற்சாகம்

    இந்நிலையில் எச்.வினோத் – கமல் கூட்டணியில் ஒரு படம் உருவாகவுள்ளதாக கோலிவுட்டில் பேசப்படுகிறது. விக்ரம் படத்தின் மெகா வெற்றியைத் தொடர்ந்து கமல் தற்போது ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஏற்கனவே படமாக்கப்பட்டுள்ளன.

    இந்தியன் முதல் பாகத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த நிலையில் இரண்டாம் பாகத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து கமல் அடுத்ததாக மலையாள சினிமாவில் சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்த மகேஷ் நாராயணன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

    ராகவா லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன் படத்தின் ‘க்ளிம்ஸ்’ வீடியோ வெளியானது…

    இந்த படத்தை தொடர்ந்து எச்.வினோத்துடன் கமல் இணைவார் என்று பேசப்படுகிறது. தற்போது துணிவு படத்தின் டப்பிங் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. இந்தப் படம் பொங்கலையொட்டி வெளியாகி விஜய்யின் வாரிசு படத்துடன் மோதுகிறது.

    Published by:Musthak
    First published:

    Tags: Kamal Haasan