Uma Sethuraman: ’நீங்க கதவை தட்டுவீங்கன்னு காத்துட்டு இருக்கேன்’ - மறைந்த நடிகர் சேதுவின் மனைவி உருக்கம்

உமா - சேதுராமன்

நடிகரும் மருத்துவருமான சேதுராமனின் முதலாமாண்டு நினைவை ஒட்டி, அவரது மனைவி உமா உருக்கமான பதிவொன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கிறார்.

  • Share this:
    நடிகரும் மருத்துவருமான சேதுராமனின் முதலாமாண்டு நினைவை ஒட்டி, அவரது மனைவி உமா உருக்கமான பதிவொன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கிறார்.

    'கண்ணா லட்டு தின்ன ஆசையா’ திரைப்படத்தில் நடித்து புகழ் பெற்றவர் நடிகரும் மருத்துவருமான சேதுராமன். இதையடுத்து ‘வாலிப ராஜா’, ’சக்க போடு போடு ராஜா’ உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்தார். பிரபல தோல் சிகிச்சை மருத்துவரான சேது, பல்வேறு திரை பிரபலங்களுக்கும் தோல் ரீதியான மருத்துவ சிகிச்சைகளையும் ஆலோசனைகளையும் வழங்கி வந்தார்.

    இந்நிலையில் கடந்தாண்டு நடைப்பயிற்சிக்கு சென்றவர் மாரடைப்பால் மறைந்தார். நேற்றுடன் அவர் இறந்து ஒரு வருடம் ஆகிறது. அப்போது அவரது மனைவி உமா கர்ப்பமாக இருந்தார். இதையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் தனது கணவரை நினைவுக்கூர்ந்து பதிவொன்றை வெளியிட்டிருக்கிறார் உமா.

    Rekha Krishnappa: மீண்டும் களத்தில் இறங்கிய அண்ணியார் – ரேகா கிருஷ்ணப்பாவின் புதிய சீரியல்!



     




    View this post on Instagram





     

    A post shared by Uma (@uma.sethuraman)






    ”மா... அப்படிதான் நான் எப்போதும் உங்களை அன்பாக அழைத்திருக்கிறேன்.. இதுவரை உங்களை ஒருபோதும் பெயர் சொல்லி அழைத்ததில்லை... ஏனென்றால் எதிர்பார்ப்பில்லாமல் நீங்கள் இருப்பதற்காக நான் உங்களை நேசிக்கிறேன், மதிக்கிறேன்.

    கான்பரன்ஸ் திட்டமிடல் / பயணங்கள் / தினசரி நோயாளி அட்டவணை / பயிற்சி அமர்வுகள் / உணவு / ஓய்வு என என் வழக்கமான வேலகளை உங்களைச் சுற்றி மட்டுமே இருந்தது.

    4 ஆண்டுகளில் நான் எப்போதும் உங்களுக்கே முன்னுரிமை அளித்தேன், நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்பதைப் பற்றி மட்டுமே சிந்தித்து, அவற்றைச் செய்ய எனக்கு தெரிந்த சிறிய வழிகளில் உதவினேன்.

    நீங்கள் கனவு காண்பதை ஒருபோதும் நிறுத்தவில்லை.... உங்கள் கனவுகளை நிரைவேற்றும் முயற்சிகளுக்கு நான் ஒருபோதும் ‘நோ’ சொல்லியதில்லை.

    உங்களுக்கு பெர்சனல் அசிஸ்டெண்டாக இருப்பதற்கு எனக்குக் கிடைத்த அதிர்ஷ்டத்தைப் பற்றி, பல நேரம் உங்களுடன் வேடிக்கையாக உரையாடியிருக்கிறேன்.

    பணம் உங்களுக்கு ஒருபோதும் முக்கியமாக இருந்ததில்லை. மகிழ்ச்சி மற்றும் அன்பு தான் முக்கியமானது. உங்களுக்கு நெருக்கமான ஒருவர் வருத்தப்பட்டால், உங்களால் தூங்க முடியாது.

    மிகவும் சிந்தனைமிக்க, உணர்ச்சிமிக்க, ஆத்மார்த்தமான, தியான, குழந்தைத்தனமான, அப்பாவி, முதிர்ந்த ஆத்மா....

    உங்களையும் உங்கள் குணத்தையும் யாராலும் பிரதிபலிக்க முடியாது.

    ஏற்கனவே 1 வருடம் ஆகியிருப்பதை என்னால் நம்ப முடியவில்லை, நீங்கள் கதவைத் தட்டுவீர்கள் என்று நான் இன்னும் நினைத்துக் கொண்டிருக்கிறேன்... தட்டுவீர்களா??

    வேதாந்த் மற்றும் சஹானா வளர்ந்து கதவைத் தட்டும் வரை காத்திருப்பேன்

    நீங்கள் வெகு தொலைவில் இல்லை.... உங்களைக் கேட்கவோ பார்க்கவோ முடியாத அளவுக்கு அருகில் தான் இருக்கிறீர்கள்..” என்று உருக்கமாக குறிப்பிட்டிருக்கிறார் உமா.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: