முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ''இந்த விஷயத்துல எம்ஜிஆருக்கு பிறகு அஜித்தான்'' - நெகிழ்ச்சியுடன் மறைந்த நடிகர் மயில்சாமி பேசிய வீடியோ

''இந்த விஷயத்துல எம்ஜிஆருக்கு பிறகு அஜித்தான்'' - நெகிழ்ச்சியுடன் மறைந்த நடிகர் மயில்சாமி பேசிய வீடியோ

எம்ஜிஆர் - அஜித் - மயில்சாமி

எம்ஜிஆர் - அஜித் - மயில்சாமி

அஜித் பெயரை உச்சரிப்பதே மனசுக்கு சந்தோஷம். என்று மயில்சாமி பேசியிருந்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான மயில்சாமி கடந்த ஞாயிறன்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். அவரது உடலுக்கு ஏராளமான பிரபலங்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியது காண்போரை நெகிழ்ச்சியடைய செய்தது.

நடிப்பு மட்டுமல்லாமல் ஏழை - எளியோருக்கு உதவிகள் செய்து மக்களிடத்தில் நன்மதிப்பை பெற்றிருந்தார் மயில்சாமி. பிரபலங்கள் பலரும் நடிகர் மயில்சாமியின் உதவும் குணத்தை பாராட்டியிருக்கின்றனர் நடிகர் மயில்சாமி பல்வேறு இயற்கை பேரிடர் காலங்களில் மக்களுக்கு உறுதுணையாக உணவு உள்ளிட்ட உதவிகளை வழங்கியுள்ளார். சென்னை வெள்ளம் ஏற்பட்ட சமயத்தில் தன்னுடைய பகுதியில் வசிக்கும் மக்களுக்கு ஏராளமான உதவிகளை செய்தார்.

கொரோனா ஊரடங்கு சமயத்தில் வருமானமின்றி தவித்த ஏராளமான ஏழை குடும்பங்களுக்கு சமையலுக்கு தேவையான பொருட்களை தன்னுடைய சொந்த செலவில் வழங்கினார். அதற்காக பலரிடம் கடன் வாங்கியும் உதவியிருக்கிறார்.

இந்த நிலையில் மயில்சாமியின் பழைய வீடியோக்களை நெகிழ்ச்சியுடன் ரசிகர்கள் பகிர்ந்துவருகின்றனர். அந்த வகையில் நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ், நடிகர் அஜித்குமார் குறித்து மயில்சாமி பேசியிருக்கும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

அதில் மயில்சாமி பேசியதாவது, ''எம்ஜிஆர் ரசிகர்கள் அனைவருக்கும் உங்களை பிடிக்குது என அஜித்திடம் சொன்னேன். அதில் எனக்கு நம்பிக்கையில்லை என அவர் சொன்னார். அதற்கு நான், உங்களுக்கு தெரியாது. நான் வெளியே இருந்து பார்க்கிறேன். இரண்டு மாசங்களுக்கு பிறகு, என்னனு தெரியல, எம்ஜிஆர் ரசிகர்கள் அனைவருக்கும் அஜித்தை ரொம்ப பிடிக்குது என சோ சொன்னார்.

இப்போ கொஞ்ச நாளுக்கு முன்னாடி ஒரு போஸ்ட் பார்த்தேன், அதில் ஒரு பக்கம் எம்ஜிஆர், மற்றொரு பக்கம் அஜித். இதைப் பார்த்து சந்தோஷபட்டேன். நான் நினைத்தது அப்படியே நடக்குது. எத்தனையோ நல்ல விஷயங்களை அஜித் செய்திருக்கிறார். ஆனால் இப்போது வரை நான் அதை செஞ்சேன் என அவர் விளம்பரம் தேடுனதே இல்லை. அவர் பெயரை உச்சரிப்பதே மனசுக்கு சந்தோஷம் என்று பேசியிருந்தார். இந்த வீடியோவை நெகிழ்ச்சியுடன் அஜித் ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள்.

First published:

Tags: Actor Ajith, Mayilsamy