Home /News /entertainment /

காசு வேண்டாம்... என் அண்ணன் சிவாஜிக்காக பாடுகிறேன்!- லதா மங்கேஷ்கர் குறித்து பிரபு!

காசு வேண்டாம்... என் அண்ணன் சிவாஜிக்காக பாடுகிறேன்!- லதா மங்கேஷ்கர் குறித்து பிரபு!

லதா மங்கேஷ்கர்

லதா மங்கேஷ்கர்

தீபாவளி, விழாக்காலங்களில் எங்கள் அனைவருக்கும் துணிகளும், பரிசுகளும் அனுப்புவார் லதா. கடந்த தீபாவளி வரை இந்த வழக்கம் நடைமுறையில் இருந்தது எனத் தெரிவித்திருக்கிறார் பிரபு.

  மக்கள் திலகம் சிவாஜி கணேஷனுக்காக பணம் வாங்காமல் பாட்டு பாடிய லதா மங்கேஷ்கரை நடிகர் பிரபு நினைவுகூர்ந்துள்ளார்.

  இந்தியாவின் பழம் பெரும் பாடகி லதா மங்கேஷ்கர், பல கோடி ரசிகர்களின் இதயங்களை வென்றிருக்கிறார். இவர் கடந்த மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் மும்பையிலுள்ள ப்ரேச் கேண்டி மருத்துவமனையில் ஐசியூ பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் காலமானார். இதையடுத்து ரசிகர்களும், பிரபலங்களும் லதா மங்கேஷ்கர் மறைவுக்கு தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

  1955-ம் ஆண்டு திலீப் குமாரின் நடிப்பில் ‘உரன் கடோலா’ என்ற இந்திப் படம் வெளியானது. இந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த 9 பாடல்களையும், லதா மங்கேஷ்கரும், முகமது ரஃபியும் பாடியிருந்தார்கள். பின்னர் இந்தப் படம் ‘வான ரதம்’ என்ற டைட்டிலில் தமிழில் டப் செய்து வெளியிடப்பட்டது. இதில் ’எந்தன் கண்ணாளன்’ பாடலை கம்பதாசன் வரிகளில் பாடினார் லதா. பாடலுக்கு இசை நவ்ஷத். தொடர்ந்து சில தமிழ் படங்களில் பாடினார். ஆனால் அவையனைத்தும் நேரடி தமிழ் படங்கள் இல்லை. இந்தியில் இருந்து தமிழில் டப்பிங் செய்யப்பட்ட படங்களில் மட்டுமே பாடினார்.

  ஆனாலும் 1956-ம் ஆண்டிற்குப் பிறகு வேறெந்த தமிழ் படங்களிலும் பாடாமல் இருந்தார் லதா மங்கேஷ்கர். அவரை 1987-ம் ஆண்டு பிரபு நடித்த ‘ஆனந்த்’ என்ற படத்திற்காக மீண்டும் தமிழுக்கு அழைத்து வந்தார் இளையராஜா. இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘ஆராரோ ஆராரோ’ என்ற பாடலைப் பாடினார் லதா. ஆக, இது தான் அவர் நேரடியாகப் பாடிய முதல் தமிழ் பட பாடல்.

  இந்தப் பாடல் குறித்த சுவாரஸ்ய தகவலை பிரபல பத்திரிக்கையில் தெரிவித்திருக்கிறார் பிரபு. அதில், “எனது அண்ணன் ராம்குமார் தான் ஆனந்த் படத்தில் லதா மங்கேஷ்கர் பாடியே ஆக வேண்டுமென்பதில் மிகவும் பிடிவாதமாக இருந்தார். லதா மங்கேஷ்கர் எங்கள் அழைப்பை ஏற்று இங்கு ஆனந்த் படத்தில் ஆராரோ ஆராரோ பாடலைப் பாடிச் சென்றார். அந்தப் படத்தில் அப்பாடலைப் பாடியதற்காக அவர் சம்பளம் வேண்டாம் என்று சொல்லிவிட்டார். என் மூத்த அண்ணன் சிவாஜி கணேசனுக்காக பாடுகிறேன் என்று கூறி அப்பாடலை அவர் பாடிச் சென்றார். லதா மங்கேஷ்கரும் அவரது சகோதரிகளும் என் தந்தையின் தீவிர ரசிகைகள். அவர்கள் என் தந்தையை அண்ணா என்றே அன்புடன் அழைத்தனர்.

  15 மாதங்களுக்குப் பின் திரையரங்கில் வெளியான சூர்யாவின் சூரரைப்போற்று!

  லதா அவ்வப்போது எங்களுக்கு ஏதேனும் புகைப்படங்களை அனுப்பிவைப்பார். சில நேரங்களில் கடவுளின் புகைப்படங்களை அனுப்பிவைப்பார். அவர் மருத்துவமனையில் அனுமதியாவதற்கு சில நாட்களுக்கு முன்னர் கூட எனக்கு சில புகைப்படங்களை அனுப்பினார். கடவுளர், ஷீரடி குரு பாபா, எனது அப்பா என மாறிமாறி இவர்களின் புகைப்படங்களை அனுப்பி வைப்பார்.

  கேரளாவை உலுக்கிய தங்கக் கடத்தல் வழக்கு - பிக் பாஸ் அக்‌ஷராவிடம் அமலாக்கத்துறை பல மணிநேரம் விசாரணை  எங்களின் அன்னை இல்ல வளாகத்தினுள் ஒரு சிறிய பங்களா இருக்கிறது. அதுதான் எங்களுக்கும் லதா மங்கேஷ்கருக்குமான உறவின் சாட்சி. சென்னை வரும்போது லதா மங்கேஷ்கர் தங்கிச் செல்வதற்காகவே அதைக் கட்டினார்கள். அப்பா இரண்டே மாதங்களில் அதைக் கட்டச் செய்தார். லதா மங்கேஷ்கருக்கு ஓட்டல் உணவு பிடிக்காது. ஆகையால் அம்மாவே அவர் கையில் அவருக்கு சமைத்துக் கொடுப்பார். அப்போது சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் எல்லாம் இப்போது போல் சுலபமாகக் கிடைக்காது என்பதால் அம்மா அவர்களுக்காக ஃப்ளாஸ்கில் சுடு தண்ணீர் கொடுத்து அனுப்புவார். லதாவும் பதிலுக்கு தீபாவளி, விழாக்காலங்களில் எங்கள் அனைவருக்கும் துணிகளும், பரிசுகளும் அனுப்புவார். கடந்த தீபாவளி வரை இந்த வழக்கம் நடைமுறையில் இருந்தது” என உருக்கமாக தெரிவித்துள்ளார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published:

  Tags: Lata Mangeshkar

  அடுத்த செய்தி