வசூலில் மிரட்டிய இந்தியத் திரைப்படங்கள்... ஓரங்கட்டப்பட்டதா தமிழ் சினிமா..?

விஜய்யின் பிகில், ரஜினியின் பேட்ட, அஜித்தின் விஸ்வாசம் ஆகிய மூன்று படங்கள் மட்டுமே 500 கோடி வரை வசூல் செய்து அசத்தியுள்ளன.

வசூலில் மிரட்டிய இந்தியத் திரைப்படங்கள்... ஓரங்கட்டப்பட்டதா தமிழ் சினிமா..?
இந்திய சினிமா வசூல் வேட்டை
  • News18
  • Last Updated: February 20, 2020, 5:54 PM IST
  • Share this:
கடந்த ஆண்டு மட்டும் இந்தியாவில் அனைத்து மொழி படங்களும் சேர்த்து 10 ஆயிரம் கோடி வரை வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதில் முதல்முறையாக தமிழ், தெலுங்கு படங்களின் வசூலை ஹாலிவுட் படங்கள் ஓரங்கட்டியுள்ளன. 

டிக்கெட் விலை, பைரஸி போன்ற காரணங்களால் திரையரங்கிற்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக ஒரு தரப்பில் கூறப்பட்டு வரும் நிலையில் கடந்த ஆண்டு மட்டும் இந்திய திரையரங்குகளில் வெளியான படங்கள் ஒட்டுமொத்தமாக 10,000  கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து மிரட்டியுள்ளன. இதில் ஹாலிவுட் படங்கள் மட்டுமே முதல்முறையாக இந்தியாவில் 1600 கோடி வரை வசூல் செய்து அசத்தியுள்ளன.

கடந்த ஆண்டு ஹாலிவுட்டில் இருந்து அவெஞ்சர்ஸ் தி எண்ட் கேம் திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட பல்வேறு மொழிகளில் இந்தியாவில் டப் செய்யப்பட்டு வெளியானது. மேலும் கோடை விடுமுறையில் வெளியான இப்படம் அனைத்து மொழிகளிலும் சேர்த்து 433 கோடி வரை வசூல் செய்து இந்தியாவில் அதிக வசூல் செய்த ஹாலிவுட் படம் எனும் வரலாற்று சாதனையை நிகழ்த்தியது.


இதைதொடர்ந்து வெளியான லயன் கிங் படமும் இந்தியாவில் 180 கோடி வரை வசூல் செய்து மிரட்டியது. மேலும் Spider Man Far from Home, Captain Marvel, Fast and Furious 9-ம் பாகம் என கடந்த ஆண்டு ஹாலிவுட்டில் இருந்து வெளியான படங்கள் இந்திய ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வசூல் வேட்டை நடத்தின. இதன் காரணமாக முதல்முறையாக கடந்த ஆண்டில் தமிழ், தெலுங்கு மொழி படங்களை விடவும் அதிக வசூல் செய்து ஹாலிவுட் படங்கள் வியப்பை ஏற்படுத்தியுள்ளன.

வழக்கம்போல கடந்த ஆண்டும் இந்தி படங்களே இந்திய பாக்ஸ் ஆபீஸில் அதிக வசூல் நிகழ்த்தியுள்ளன. ஷாருக்கான், சல்மான் கான் போன்ற உச்ச நட்சத்திரங்களின் படங்கள் கடந்த ஆண்டு சொதப்பி விட்டாலும் War, Kabir Singh, Good News போன்ற படங்களின் பிரமாண்ட வெற்றி பாலிவுட்டை புத்துயிர் பெற செய்தது. இதன் மூலம் 4,400 கோடி வரை பாலிவுட் படங்கள் கடந்த ஆண்டு இந்தியாவில் வசூல் செய்துள்ளன.

ஹாலிவுட், பாலிவுட்டுக்கு அடுத்தபடியாக தமிழ், தெலுங்கு படங்கள் அதிக வசூலை குவித்துள்ளன. இதில் தமிழ் படங்கள் 1300 கோடி வரை வசூலை குவித்திருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதில் குறிப்பாக விஜய்யின் பிகில், ரஜினியின் பேட்ட, அஜித்தின் விஸ்வாசம் ஆகிய மூன்று படங்கள் மட்டுமே 500 கோடி வரை வசூல் செய்து அசத்தியுள்ளன.அதேபோல் சாஹோ, சைரா நரசிம்ம ரெட்டி படங்களின் பிரம்மாண்ட வசூல் காரணமாக தெலுங்கு படங்களும் கடந்த ஆண்டு இந்திய பாக்ஸ் ஆபீஸில் 1300 கோடி வரை வசூல் செய்துள்ளன.

இதன் மூலம் முதல்முறையாக 10 ஆயிரம் கோடி எனும் இமாலய இலக்கை இந்திய பாக்ஸ் ஆபீஸ் எட்டியுள்ளது. இது 2018-ம் ஆண்டை விட 12 சதவிகிதம் கூடுதலான வசூல் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் 2018-ம் ஆண்டின் இறுதியில் திரையரங்க கட்டணங்களுக்கான ஜி.எஸ்.டி வரிவிதிப்பு குறைக்கப்பட்டதும் கடந்த ஆண்டில் வசூல் கூடியதற்கான காரணம் என்றும் பாக்ஸ் ஆபீஸ் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
First published: February 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்