Lara Dutta: இந்திரா காந்தியாக லாரா தத்தா - ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!

லாரா தத்தா

பெல்பாட்டம் ட்ரைலர் வெளியானதையடுத்து, லாரா தத்தாவின் இந்திரா காந்தி வேடம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

  • Share this:
    அக்‌ஷய் குமாரின் பெல் பாட்டம் என்ற இந்தி படத்தில் இந்திரா காந்தியாக நடிகை லாரா தத்தா நடித்துள்ளார்.

    அக்‌ஷய்குமார், வாணி கபூர், கியூமா குரோஷி, லாரா தத்தா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பெல் பாட்டம். இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 19-ம் தேதி வெளியாகவிருக்கிறது. உண்மை கதையை அடிப்படையாக வைத்து, பயணிகளுடன் விமானத்தை கடத்திய கும்பலிடம் இருந்து மக்களை காப்பாற்றும் கதாபாத்திரத்தில் அக்‌ஷய்குமார் வருகிறார். இதனை ரஞ்சித் திவாரி இயக்கி உள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.



    பெல்பாட்டம் படத்தின் கதை 1984-ல் நடப்பது போல் இயக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் இந்திராகாந்தி பிரதமராக இருந்தார். அதன்படி படத்தில் இந்திரா காந்தி வேடம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஆகையால் இந்திரா காந்தி வேடத்தில் லாரா தத்தா நடித்துள்ளார்.

    இந்நிலையில் பெல்பாட்டம் ட்ரைலர் வெளியானதையடுத்து, லாரா தத்தாவின் இந்திரா காந்தி வேடம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அவர் பார்ப்பதற்கு இந்திராகாந்தி போலவே இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பலரும் லாரா தத்தாவை பாராட்டி வருகிறார்கள். தமிழில் அரசாட்சி, டேவிட் ஆகியப் படங்களில் லாரா தத்தா நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: