முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ஐஷ்வர்யா ரஜினிகாந்துடன் பாடல் கம்போஸிங்… ஏ.ஆர். ரகுமான் வெளியிட்ட க்யூட் வீடியோ…

ஐஷ்வர்யா ரஜினிகாந்துடன் பாடல் கம்போஸிங்… ஏ.ஆர். ரகுமான் வெளியிட்ட க்யூட் வீடியோ…

ஏ.ஆர். ரகுமான் - ஐஷ்வர்யா ரஜினிகாந்த்.

ஏ.ஆர். ரகுமான் - ஐஷ்வர்யா ரஜினிகாந்த்.

மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஐஷ்வர்யா ரஜினிகாந்துடன் இணைந்து பாடல் கம்போஸிங் செய்யும் க்யூட்டான வீடியோவை ஏ.ஆர். ரகுமான் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகிறது.

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 3, வை ராஜா வை போன்ற படங்களை இயக்கியுள்ளார். விமர்சனம் ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் இந்த படங்கள் பாராட்டுக்களை பெற்றன.

இப்போது சிறிய இடைவெளிக்கு பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லைகா தயாரிப்பில் புதிய திரைப்படத்தை இயக்குகிறார். அந்த திரைப்படத்தில் விஷ்ணு விஷால் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்திற்கு லால் சலாம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

அதர்வா-க்கு கைக்கொடுக்குமா ` பட்டத்து அரசன்’.. படம் எப்படி இருக்கு? - திரை விமர்சனம்

விஷ்ணு விஷாலுடன் நடிகர் விக்ராந்தும் இந்த படத்தில் இணைந்து நடிக்கிறார். லால் சலாம் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். கிரிக்கெட் தொடர்பான கதை என்றும் கூறப்படுகிறது. மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் இந்த படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளார்.

காந்தாரா படத்தின் ‘வராஹ ரூபம்‘ பாடல் மீதான தடை நீக்கம்… உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

இந்நிலையில் லால் சலாம் படத்திற்கான பாடல் கம்போஸிங் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. ஏ.ஆர். ரகுமானின் மும்பை ஸ்டூடியோவில் இதற்காக ஐஷ்வர்யா ரஜினிகாந்தும், ஏ.ஆர்.ரகுமானும் பிஸியாக உள்ளனர். இதுதொடர்பாக ரகுமான் தனது சமூக வலைதள பக்கங்களில் க்யூட்டான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ லைக்ஸ்களை குவித்து வருகிறது.

top videos

    கோப்ரா, வெந்து தணிந்தது காடு, பொன்னியின் செல்வன், இரவின் நிழல் என சூப்பர் ஹிட் ஆல்பங்களை ரகுமான் இந்தாண்டு கொடுத்துள்ளார். அடுத்ததாக  சிம்பு நடிக்கும் பத்து தல, வெந்து தணிந்தது காடு 2ஆம் பாகம், பொன்னியின் செல்வன் 2 ஆம் பாகத்தின் பணிகளை ரகுமான் மேற்கொண்டு வருகிறார்.

    First published:

    Tags: Kollywood