Home /News /entertainment /

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரிவு குறித்து கேள்வி எழுப்பிய நெட்டிசன்... பதில் சொன்ன லட்சுமி ராமகிருஷ்ணன்!

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரிவு குறித்து கேள்வி எழுப்பிய நெட்டிசன்... பதில் சொன்ன லட்சுமி ராமகிருஷ்ணன்!

லட்சுமி ராமகிருஷ்ணன் - தனுஷ் ஐஸ்வர்யா

லட்சுமி ராமகிருஷ்ணன் - தனுஷ் ஐஸ்வர்யா

Dhanush Aishwarya Rajinikanth: நெட்டிசன் ஒருவர் லட்சுமி ராமகிருஷ்ணனிடம், ’அம்மா இதெல்லாம் உங்க கண்ணுக்கு தெரியாதா? ரெண்டு பேரையும் கூட்டிட்டு போய் சேர்த்து வைங்க’ எனக் கேட்டார்.

    தனுஷ் - ஐஸ்வர்யா ரஜின்காந்த் இருவரிடமும் பேசி சேர்த்து வையுங்கள் என நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனிடம் நெட்டிசன் ஒருவர் கேட்டதற்கு, தயவு செய்து அவர்களை விட்டு விடுங்கள் என்று தெரிவித்திருக்கிறார் லட்சுமி.

    நடிகர் தனுஷ் அவரது மனைவி ஐஸ்வர்யா இருவரும் தங்கள் திருமண உறவை முறித்துக் கொள்வதாக கடந்த திங்கட்கிழமை இரவு அறிவித்தனர். இருவரும் சமூகவலைதளங்களில் ஒரே மாதிரியான அறிக்கையை வெளியிட்டு, தாங்கள் பிரிவதை உறுதிப்படுத்தினர்.

    ”நாங்கள் இருவரும் பிரிவதாக பரஸ்பரம் முடிவு செய்துள்ளோம். மேலும் எங்களை தனிநபர்களாக சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் ஒதுக்குகிறோம். தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனி மனித சுதந்திரத்தை எங்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்" என அதில் குறிப்பிட்டிருந்தனர்.

    Dhanush: நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்ட தனுஷ்...

    இதைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். இதையடுத்து நெட்டிசன் ஒருவர் ‘சொல்வதெல்லாம் உண்மை’ லட்சுமி ராமகிருஷ்ணனிடம், ’அம்மா இதெல்லாம் உங்க கண்ணுக்கு தெரியாதா? ரெண்டு பேரையும் கூட்டிட்டு போய் சேர்த்து வைங்க’ எனக் கேட்டார்.

    Dhanush Aishwarya: பெருமைக்குரிய மனைவி எனக் குறிப்பிட்ட 3 மாதத்திற்குள் தனுஷை பிரிந்த ஐஸ்வர்யா

    அதற்கு பதிலளித்த லட்சுமி ராமகிருஷ்ணன், “சட்டப்பூர்வமாக விவாகரத்து செய்வதற்கு முன்பு ஒருவரையொருவர் பகிரங்கமாக குற்றம் சாட்டாமல் அல்லது வேறொருவருடன் காதல் கொண்டு மன உளைச்சலை ஏற்படுத்தாமல், அவர்கள் மரியாதையுடன் விலகிச் செல்கிறார்கள், தயவுசெய்து அவர்களை விட்டுவிடுங்கள்” என்றார்.

    தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரிவு குறித்து முன்பே ட்விட்டரில் குறிப்பிட்ட செல்வராகவன்?



    இதையடுத்து, “அவர்களின் முடிவை நான் மதிக்கிறேன், அது அவர்களின் சொந்த முடிவு, அமைதியாக எடுத்துவிட்டு போகாமல், ஏன் இப்படி விளம்பரம் செய்கிறார்கள். ஒரு காலத்தில் விவாகரத்து என்பது வழக்கத்திற்கு மாறான விஷயமாக இருந்தது. தற்போது பிரபலங்களால் அது சாதாரணமாகி விட்டது” என்றார் அந்த நெட்டிசன்.

    Dhanush: தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரிவுக்கு இது தான் காரணமா?



    அதற்கு, ”பிரச்னை என்னவென்றால், அவர்கள் அறிவிக்காவிட்டால், திரிக்கப்பட்ட செய்திகள் வெளிவரும், அவர்களின் அனுமதியின்றி, தவறான தகவல்கள் பரப்பப்படும். மிகவும் அழகான மற்றும் கண்ணியமான அறிவிப்புக்குப் பிறகும் சமந்தா மிகவும் கொடூரமான விஷயங்களைச் சகிக்க வேண்டியிருந்தது” என்று பதிலளித்திருக்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor dhanush, Actress Lakshmi Ramakrishnan, Aishwarya Dhanush, Dhanush

    அடுத்த செய்தி