சிவகார்த்திகேயனின் முதல் படம் நான் இயக்கியதாக இருந்திருக்கும் - லட்சுமி ராமகிருஷ்ணன்

அவர் அந்த கதாபாத்திரம் இல்லாமல் கமர்சியல் ரீதியிலான வெற்றிப் படங்களைச் சிறப்பாக செய்துள்ளார்.

சிவகார்த்திகேயனின் முதல் படம் நான் இயக்கியதாக இருந்திருக்கும் - லட்சுமி ராமகிருஷ்ணன்
இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன்
  • Share this:
சிவகார்த்திகேயனின் முதல் படம் நான் இயக்கிய படமாக இருந்திருக்கும் என்று இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

டிவியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயன் மெரினா படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராகியுள்ளார். மேலும் தயாரிப்பாளராகவும், பாடலாசிரியராகவும் பன்முக திறமை கொண்ட கலைஞனாக அவதாரமெடுத்துள்ளார்.

இந்நிலையில் 'குறள் 786' என்ற ட்ரெய்லரை வெளியிட்டிருக்கும் இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணனிடம் ஏன் இந்த குறும்படத்தை வெளியிடவில்லை. எப்போது மேடம் வெளியிடுவீர்கள் என்று நெட்டிசன் ஒருவர் கேள்வி எழுப்பினார்.


அதற்கு பதிலளித்த லட்சுமி ராமகிருஷ்ணன், “இது குறும்படம் இல்லை. நான் சிவகார்த்திகேயனை அறிமுகப்படுத்தியிருந்தால் அவருடனான என்னுடைய அறிமுகப் படமாக இருந்திருக்க வேண்டும். நான் அந்தப் படத்தைக் கைவிட்டு விட்டேன். அவர் மெரினா படத்தில் நடித்தார். குறல் 786-ல் அவருடைய கதாப்பாத்திரம் சிறப்பானது. ஆனால், அவர் அந்த கதாபாத்திரம் இல்லாமல் கமர்சியல் ரீதியிலான வெற்றிப் படங்களைச் சிறப்பாக செய்துள்ளார்.

லட்சுமி ராமகிருஷ்ணன் வெளியிட்டிருக்கும் குறள் 786 ட்ரெய்லரில் சிவகார்த்திகேயன், அபிநயா, ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்ததோடு இயக்குநராக லட்சுமி ராமகிருஷ்ணன் பெயர் இடம்பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.



மேலும் படிக்க: தமிழக அரசின் இந்த உத்தரவு அதிர்ச்சியாக இருக்கிறது - ராகவா லாரன்ஸ்
First published: April 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading