விஜய் சேதுபதிக்கு கோரிக்கை வைத்த லட்சுமி ராமகிருஷ்ணன்!

விஜய் சேதுபதிக்கு கோரிக்கை வைத்த லட்சுமி ராமகிருஷ்ணன்!
லட்சுமி ராமகிருஷ்ணன்
  • News18
  • Last Updated: June 24, 2019, 8:25 PM IST
  • Share this:
சிந்துபாத் படமும், ஹவுஸ் ஓனர் படமும் ஒரே தேதியில் வெளியாகவுள்ளதால் தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய் சேதுபதிக்கு கோரிக்கை விடுத்துள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன்.

இயக்குநர் அருண்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அஞ்சலி நடித்துள்ள பட்ம சிந்துபாத். இந்தப் படத்தில் விஜய்சேதுபதியின் மகன் சூர்யாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜூன் 21ஆம் தேதி வெளியாகவிருந்த இந்தப் படம் பாகுபலி தயாரிப்பாளருக்குக் கொடுக்க வேண்டிய தொகையைச் செலுத்தாததால் வெளியிடப்படாமல் தள்ளிவைக்கப்பட்டது.
தற்போது மீண்டும் ஜூன் 28-ம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


அதே தேதியில் லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கியுள்ள ஹவுஸ் ஓனர் படமும் ரிலீசாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிந்துபாத் படம் திடீரென ஜூன் 28- ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், தன்னுடைய படத்தின் நிலையை குறித்து ட்வீட் செய்துள்ளார்.

அந்த பதிவில், “நட்சத்திரங்கள் நடிக்காத படங்களில் நிலைமை மோசமாக உள்ளது. மே 10 முதல் படத்தை வெளியிட தயாராக இருந்தோம். பெரிய நடிகர்களின் படங்களாக் ஜுன் 21-ம் தேதிக்கு தள்ளி வைத்தோம். ஒரு பெரிய நடிகரின் படம் ஜுன் 21-ம் தேதி வெளியாவதாக அறிவித்தவுடன் நாங்கள் 28-ம் தேதிக்கு நகர்ந்தோம். இப்போது அவர்கள் 28-ம் தேதி வர வாய்ப்புள்ளது. நாங்கள் எப்படிப் பிழைப்பது” என்று கூறி விஜய்சேதுபதியை டேக் செய்துள்ளார்.மேலும் இந்தப் பிரச்னையில் நடிகர் விஜய் சேதுபதியை டேக் செய்தது குறித்து கருத்து பதிவிட்டிருக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன், நான் விஜய் சேதுபதியைக் குறை கூறவில்லை. ஏன் மக்கள் தவறாக அர்த்தம் எடுத்துக் கொள்கிறீர்கள். விஜய் சேதுபதி என்னுடைய நலம் விரும்பி. நண்பர். அவரை தொலைபேசியில் அழைத்தேன். தொடர்பு கொள்ள முடியவில்லை” என்று கூறியுள்ளார்.

வீடியோ பார்க்க: தளபதி விஜய்யின் பலருக்கும் தெரியாத 50 சுவாரஸ்ய விசயங்கள்!

First published: June 24, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்