நிச்சயம் வருத்தப்பட்டிருப்பார்கள் - விஜய் சேதுபதி வீடியோ குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன்!

விஜய் சேதுபதி ஓராண்டுக்கு முன்னர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியின் வீடியோ தற்போது பேசு பொருளாகியுள்ளது.

நிச்சயம் வருத்தப்பட்டிருப்பார்கள் - விஜய் சேதுபதி வீடியோ குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன்!
விஜய் சேதுபதி | லட்சுமி ராமகிருஷ்ணன்
  • Share this:
கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள், கோயில் மற்றும் சடங்குகளை புனிதமானது என்று கருதுபவர்கள் நிச்சயமாக வருத்தப்பட்டிருப்பார்கள் என்று நடிகையும், இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

விஜய் சேதுபதி சன் டிவியில் தொகுத்து வழங்கிய ‘நம்ம ஊரு ஹீரோ’ என்ற நிகழ்ச்சியின் வீடியோ ஒன்றை ஓராண்டுக்குப் பின்னர் தற்போது சமூகவலைதளங்களில் சர்ச்சையைக் கிளப்பி வருகின்றனர். அந்த வீடியோவில் “சாமிக்கு அபிஷேகம் செய்வதை காட்டுவார்கள். பின்னர் துணி போட்டு மூடிவிடுவார்கள். அப்போது ஏன் துணி போட்டு மறைத்துவிட்டார்கள் என்று குழந்தை தாத்தாவிடம் கேட்டது. அதற்கு தாத்தா, குளித்து முடித்த சாமி இப்போது உடைமாற்றப் போகிறது என்றார். உடனே அந்தக் குழந்தை என்ன தாத்தா குளித்ததையே காட்டினார்கள். ஆனால் உடைமாற்றுவதை மூடிவிட்டார்கள்” இவ்வாறு விஜய் சேதுபதி அந்த வீடியோவில் பேசியிருந்தார்.

இந்த வீடியோவை பதிவிட்டு கருத்து தெரிவித்திருக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன், “கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் மற்றும் கோயில் மற்றும் சடங்குகளை புனிதமானது என்று கருதுபவர்கள் நிச்சயமாக வருத்தப்பட்டிருப்பார்கள். எந்த மதத்துக்குரிய மதப் பழக்கவழங்கங்களையும் கேலி செய்வதற்கு யாருக்கும் தைரியம் இருக்காது. நான் ஒப்புக்கொள்கிறேன்.. ஆனால், நீங்கள் ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்னாள் எந்த அர்த்தத்தில் எப்போது அவர் அப்படி பேசினார் என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.First published: May 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading