‘ஆடை’ குறித்த விவாதத்துக்கு தயாரா? - அமலாபாலுக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் கேள்வி!

news18
Updated: July 22, 2019, 1:30 PM IST
‘ஆடை’ குறித்த விவாதத்துக்கு தயாரா? - அமலாபாலுக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் கேள்வி!
லட்சுமி ராமகிருஷணன் | அமலாபால்
news18
Updated: July 22, 2019, 1:30 PM IST
‘ஆடை’ படம் குறித்த விவாதத்துக்கு தயாரா? என்று அமலாபாலுக்கு லட்சுமி ராமகிருஷணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

‘மேயாத மான்’ பட இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் அமலாபால் நடித்திருக்கும் படம் ஆடை. இந்தப் படத்தை வீ ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. விஜய் கார்த்திக் கண்ணா ஒளிப்பதிவில், பிரதீப் குமார் இசையமைத்துள்ளார்.

பிறந்தநாள் கொண்டாட தனது நண்பர்களுடன் வெளியே செல்லும் அமலாபால், ஆடையின்றி ஓர் இடத்தில் சிக்கிக் கொள்கிறார். அந்த இடத்திலிருந்து அவர் எப்படி மீண்டு வந்தார் என்பதுதான் படத்தின் கதை. ஹீரோயினை மையப்படுத்தி நகரும் இக்கதையில் ரம்யா, விவேக் பிரசன்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


ஆடை - விமர்சனம் இங்கே படியுங்க...

கடந்த 20-ம் தேதி வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ஆடையின்றி நடித்த அமலாபாலின் துணிச்சலான நடிப்பையும் திரைத்துறை பிரபலங்கள் பலர் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இயக்குநரும், நடிகையுமான லட்சுமி ராமகிருஷ்ணன் ஆடை படம் குறித்த ஆரோக்கியமான விவாதத்துக்கு தயாரா? என்று அமலாபால் மற்றும் படத்தின் இயக்குநருக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

Loading...இதுகுறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டிருக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன், ஆடை படத்துக்கு வாழ்த்துகள். படம் பார்த்தேன். உங்களுடைய கடின உழைப்பு படத்தின் ஒவ்வொரு ஃபிரேமிலும் தெரிகிறது. ஆரோக்கியமான விவாதத்துக்கு தயாரா? உங்களிடமும் படத்தின் இயக்குநரிடமும் எனக்கு சில கேள்விகள் இருக்கின்றன. இயக்குநராக நடிகராக அல்ல. ஒரு பெண்ணின் தாயாகவும், சாதாரண பார்வையாளராகவும்” என்று கூறியுள்ளார்.தனது அடுத்த ட்விட்டர் பதிவில் ஆடை படத்தில் நடித்திருக்கும் ரம்யா குறித்து பதிவிட்டிருக்கும் லட்சுமி ராம் கிருஷ்ணன், உங்களது சிறந்த நடிப்புக்கு வாழ்த்துகள். நீங்கள் நடித்த காட்சிகள் குறைந்த நேரமே வந்தாலும் என்னை ஈர்த்தது. உடை மாற்றும் அறையில் நடக்கும் உரையாடலில் உங்களது சிறப்பான பங்களிப்பை செய்திருக்கிறீர்கள்” என்று கூறியுள்ளார்.

வீடியோ பார்க்க: அடுத்தடுத்து மூன்று படங்களில் நடிக்கும் கமல்

First published: July 22, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...