முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / பிரபல இயக்குநரின் பிரமாண்ட படத்தில் லட்சுமி மேனன்!

பிரபல இயக்குநரின் பிரமாண்ட படத்தில் லட்சுமி மேனன்!

லட்சுமி மேனன்

லட்சுமி மேனன்

பெரும்பாலான ஹாரர் த்ரில்லர்களைப் போல அல்லாமல் இப்படம் பிரமாண்டமாக இருக்கும்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

இயக்குநர் அறிவழகன் இயக்கும் புதிய படத்தில் நடிகை லட்சுமி மேனன் நடிக்கவிருக்கிறார்.

ஈரம் பட நடிகர் ஆதிக்கு ஜோடியாக சப்தம் படத்தில் நாயகியாக நடிக்க நடிகை லட்சுமி மேனனை இயக்குனர் அறிவழகன் ஒப்பந்தம் செய்துள்ளார். 2012-ஆம் ஆண்டு கும்கி படத்தின் மூலம் அறிமுகமான லட்சுமி மேனன், படிப்பில் கவனம் செலுத்த பிரேக் எடுத்தார்.

”லட்சுமி மேனன் இந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவர் என்று உணர்ந்தேன், அவர் ஸ்கிரிப்ட்களைக் கேட்க ஆரம்பித்துவிட்டார் என்று கேள்விப்பட்டதும், இந்த கதையை விவரிக்க அவரைச் சந்தித்தேன். அவரும் கதையை விரும்பியதையடுத்து, உடனடியாக படத்தில் ஒப்பந்தமானார்” என்று பிரபல ஆங்கில ஊடகத்திடம் கூறினார் அறிவழகன்.

இருப்பினும், லட்சுமி மேனன் கதாபாத்திரம் பற்றி பேச மறுத்த அறிவழகன், குறைந்த பட்ஜெட்டில் உருவாகும் பெரும்பாலான ஹாரர் த்ரில்லர்களைப் போல அல்லாமல் இப்படம் பிரமாண்டமாக இருக்கும் என்றார். “சப்தம், கம்பீரமான, பிரமாண்டமான காட்சியமைப்பு அமைப்பு நிறைந்த படமாக இருக்கும். சென்னையில் 1 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமான கல்லூரி செட் அமைத்து, அதில் சில முக்கிய காட்சிகளை படமாக்க திட்டமிட்டுள்ளோம்” என்று படம் குறித்து மேலும் கூறினார்.

விஜய் டிவி நிகழ்ச்சிகளில் இருந்து பாதியிலேயே வெளியேறிய பிரபலங்கள்!

இதுவரை மும்பை, மூணாறு, சென்னை ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ள நிலையில், படத்தின் முதல் ஷெட்யூல் முடித்துவிட்டதாக கூறுகிறார் அறிவழகன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Lakshmi Menon