முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / Viral Video : மெட்ரோ ரயிலில் டான்ஸ் ஆடிய பிரபல நடிகை - வைரல் வீடியோ

Viral Video : மெட்ரோ ரயிலில் டான்ஸ் ஆடிய பிரபல நடிகை - வைரல் வீடியோ

லட்சுமி மேனன்

லட்சுமி மேனன்

Lakshmi Menon Dance At Metro Rail : நடிகை லட்சுமி மேனன் ஓடும் மெட்ரோ ரயிலில் டான்ஸ் ஆடி வீடியோ பதிவிட்டுள்ளார்.

  • Last Updated :

நடிகை லட்சுமி மேனன் தமிழில் பிரபு சாலமன் இயக்கத்தில், விக்ரம் பிரபு நடிப்பில் வெளிவந்த‘கும்கி’ திரைப்படம் மூலம் அறிமுகமானார். இந்த படத்தின் மூலம் பல இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தார்.அதையடுத்து தொடர்ந்து சுந்தர பாண்டியன், குட்டி புலி, மஞ்சப்பை, நான் சிகப்பு மனிதன், ஜிகர்தண்டா, கொம்பன், வேதாளம், மிருதன், ரெக்க இப்படி பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தார்.

பின்பு மேல் படிப்பை தொடர வேண்டும் என்பதற்காக திரைப்படங்களில் இருந்து சில ஆண்டுகள் விலகி இருந்தார். இந்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியான ‘ புலிக்குத்தி பாண்டி’என்ற படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ளார். அதையடுத்து தற்போது ‘சிப்பாய்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் மலையாளத்திலும் , பெயர் வைக்காத படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார்.

நடிகை லட்சுமி மேனன் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருப்பார். திரைப்படங்களில் இருந்து விலகி இருந்த போது கூட தனது போட்டோ ஷூட் படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்தார்.

also read : பிங்க் நிற அனார்க்களியில் அசத்தும் ரகுல் ப்ரீத் சிங்..

இந்நிலையில் ஆளில்லாத மெட்ரோ ரயிலில் டான்ஸ் ஆடும் இன்ஸ்டா ரீல்ஸ் ஒன்றை பகிர்ந்துள்ளார். இதில் ஜீன்ஸ் மற்றும் டீ சர்ட் அணிந்துள்ள லட்சுமி மேனன் இங்கிலிஷ் பாடல் ஒன்றிற்கு கூலாக டான்ஸ் ஆடுகிறார்.


top videos

    லட்சுமி மேனனின் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    First published:

    Tags: Lakshmi Menon, Viral Video