Home /News /entertainment /

வாழ்த்து மழையில் நனையும் ’லால் சிங் சத்தா’ திரைப்படம்.. பாராட்டி தள்ளிய சிவகார்த்திகேயன்!

வாழ்த்து மழையில் நனையும் ’லால் சிங் சத்தா’ திரைப்படம்.. பாராட்டி தள்ளிய சிவகார்த்திகேயன்!

லால் சிங் சத்தா

லால் சிங் சத்தா

அமீர்கான் நடித்துள்ள லால் சிங் சத்தா திரைப்படம் மனிதன் அன்பு காதல் ஆகியவற்றை பேசுகிறது என சிவகார்த்திகேயன் பாராட்டி இருக்கிறார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
அமீர்கான் நடிப்பில் உருவாகியுள்ள லால் சிங் சத்தா திரைப்படம் மனிதன், அன்பு ஆகியவையை பேசுகிறது என நடிகர் சிவகார்த்திகேயன் பாராட்டியுள்ளார். 

அமீர்கான் நடித்துள்ள லால் சிங் சத்தா திரைப்படம் வரும் 11ம் தேதி வெளியாகிறது.  இந்த திரைப்படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலின் வெளியிடுகிறார். இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் லால் சிங் சத்தா திரைப்படத்தை பார்த்துள்ளார். அதற்குப் பிறகு பேசியுள்ள சிவகார்த்திகேயன்,  இந்த திரைப்படத்தில் மனிதத்தின் முக்கியத்துவம், அன்பு,  நேர்மறை எண்ணங்கள் உள்ளிட்டவை கூறப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.

கேள்விக்குறியாகும் லோ பட்ஜெட் படங்களின் நிலை.. திரை துறையினர் வேதனை!

இன்றைய காலகட்டத்தில் அன்பு,  காதல் ஆகியவற்றை சொல்லும் திரைப்படம் தேவை. சோர்வாக இருக்கும் பொழுது ஊக்கமளிக்கும் திரைப்படங்கள் பார்க்கத் தோன்றும்.  அதுபோன்ற ஒரு திரைப்படம்தான் லால் சிங் சத்தா. அன்பு - காதல் - மனிதம் உள்ளிட்டவற்றை இந்தப் படம் கூறுகிறது எனவும் சிவகார்த்திகேயன் பாராட்டியுள்ளார்.

Vijay 67 : ஆயுத பூஜைக்கு வெளிவரும் விஜய் படம்!

சிவகார்த்திகேயனை தவிர இயக்குனர்கள் மணிரத்னம், ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ்,  கிருத்திகா உதயநிதி,  நடிகர்கள் சரத்குமார்,  அசோக் செல்வன் உள்ளிட்டோர் லால் சிங் சதா திரைப்படத்தை பார்த்து பாராட்டியுள்ளனர். இந்த திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்கு  அமீர்கான் சென்னை வந்து சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Sreeja
First published:

Tags: Bollywood, Kollywood, Sivakarthikeyan

அடுத்த செய்தி