Home /News /entertainment /

'ஆமிர் கான் படங்களை பார்ப்பதற்காக ஸ்கூலை கட் அடித்துள்ளேன்' - உதயநிதி ஸ்டாலின்

'ஆமிர் கான் படங்களை பார்ப்பதற்காக ஸ்கூலை கட் அடித்துள்ளேன்' - உதயநிதி ஸ்டாலின்

லால் சிங் சத்தா பட புரொமோஷன் நிகழ்ச்சியில் ஆமிர் கான் - உதயநிதி

லால் சிங் சத்தா பட புரொமோஷன் நிகழ்ச்சியில் ஆமிர் கான் - உதயநிதி

நான் ஆமிர்கானின் மிகப்பெரும் ரசிகன். அவர் நடிக்கும் படத்தை வெளியிடுவேன் என்று நான் ஒருநாளும் நினைத்தது கிடையாது. லால் சிங் சத்தா திரைப்படம் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    'ஆமிர் கான் படங்களை பார்ப்பதற்காக ஸ்கூலை கட்  அடித்துள்ளேன்' என்று உதயநிதி ஸ்டாலின் பேசியது வைரலாகியுள்ளது.

    இந்தி திரையுலகின் முன்னணி நடிகரான ஆமிர்கான் லால் சிங் சத்தா என்ற படத்தில் நடித்துள்ளார். 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஃபாரெஸ் கெம்ப் என்ற படத்தின் ரீமேக் தான் லால் சிங் சத்தா.

    இந்த படத்தில் ஆமிருடன் கரீனா கபூர், நாக சைதன்யா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். வரும் வியாழன் அன்று இந்த திரைப்படம் உலகம் முழுவதும் திரைக்கு வரவுள்ளது.

    இணையத்தை கலக்கும் நடிகை திஷா பதானியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

    படம் வெளியாவதையொட்டி ஆமிர் கான் மற்றும் படக்குழுவினர் படத்தை பிரபலப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே சிரஞ்சீவி, நாகார்ஜுன், எஸ்.எஸ். ராஜமவுலி, புஷ்பா இயக்குனர் சுகுமார் உள்ளிட்டோருக்கு லால் சிங் சத்தா படம் திரையிட்டு காட்டப்பட்டுள்ளது. அவர்களும் இந்த படத்தை வெகுவாக பாராட்டியுள்ளனர்.

    லால் சிங் சத்தா படம் சிறப்பாக உள்ளதென அதனை பார்த்துவிட்டு உதயநிதி கூறியிருந்தார். தமிழகத்தில் இந்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடவுள்ளது.

    இந்நிலையில் நேற்று படத்திற்கான புரொமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்று உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது-

    பள்ளியில் படிக்கும்போது வகுப்பை கட் அடித்து ஆமிர் கானின் ரங்கீலா படத்தை பார்த்திருக்கிறேன். திரும்ப திரும்ப ரங்கீலா படத்தை பார்த்துள்ளேன். நடிகை ஊர்மிளாவும் அதற்கு ஓர் காரணம்.

    Varisu: விஜய்யின் வாரிசு படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

    நான் ஆமிர்கானின் மிகப்பெரும் ரசிகன். அவர் நடிக்கும் படத்தை வெளியிடுவேன் என்று நான் ஒருநாளும் நினைத்தது கிடையாது. லால் சிங் சத்தா திரைப்படம் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது.

    உலகத் தரத்தில் லால் சிங் சத்தா திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. தான் இந்திய அளவில் மட்டுமல்ல, உலகளவில் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவர் என்பதை ஆமிர்கான் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.

    இவ்வாறு உதயநிதி பேசினார்.
    Published by:Musthak
    First published:

    Tags: Aamir Khan, Udhayanidhi Stalin

    அடுத்த செய்தி