மணிரத்னம் படத்தில் இருந்து விலகிய பிரபலம் - புதிதாக இணைந்த இயக்குநர்

இயக்குநர் மணிரத்னம்

மணிரத்னத்தின் ‘நவரசா’ ஆந்தாலஜியிலிருந்து பிரபல இயக்குநர் விலகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • Share this:
மணிரத்னம், ஜெயேந்திரா தயாரிப்பில்‘நவராசா’ என்ற ஆந்தாலஜி படம் உருவாகி வருகிறது. கே.வி.ஆனந்த், கவுதம் மேனன், கார்த்திக் நரேன், பொன்ராம், ஹலிதா சமீம், அரவிந்த் சாமி, பிஜோய் நம்பியார் உள்ளிட்ட 9 இயக்குநர்களின் கதை இந்த ஆந்தாலஜி படத்தில் இடம்பெறுகிறது.

சூர்யா, அரவிந்த்சாமி, சித்தார்த், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களும் ஐஸ்வர்யா ராஜேஷ், ரேவதி, பூர்ணா, ரித்விகா நித்யா மேனன் உள்ளிட்ட முன்னணி நடிகைகளும் நடித்து வருகின்றனர். இதன் ஒளிப்பதிவாளர்களாக சந்தோஷ் சிவன், பாலசுப்பிரமணியன், மனோஜ் பரஹம்சா, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா உள்ளிட்டோர் பணியாற்றுகிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான், ஜிப்ரான், இமான், கோவிந்த் வசந்தா, ஜஸ்டின் பிரபாகரன், அருள்தேவ், கார்த்திக், ரோன் எத்தன் யோஹான் ஆகியோர் இசையமைப்பாளர்களாக பணிபுரிகிறார்கள்.

கொரோனா நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள திரையுலகிற்கு நிதி திரட்டும் நோக்கில் ‘நவரசா’ என்ற ஆந்தாலாஜி உருவாகி வரும் நிலையில் இயக்குநர் கே.வி.ஆனந்த் இந்தப் படத்திலிருந்து விலகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவருக்கு பதிலாக இயக்குநர் வசந்த் இணைந்திருப்பதாகவும் அவர் இயக்கும் கதையில் அதிதி பாலன் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
Published by:Sheik Hanifah
First published: